*எனக்குப் புரிந்தது இதுவே ! (38)*
உணர்வுகள் என்பது ஆன்மாவின் ஒளி என்று பார்த்தோம் . மனிதன் சத்துவம் ,ரஜஸ்,தமஸ் என்னும் முன்று குணங்களின் வடிவானவன் இதில் சத்துவம் என்பது ஞான சேர்க்கை , ரஜஸ்என்பது கர்மாவின் சேர்க்கை , தமஸ்என்பது மயக்கத்தில் ஆழ்த்தும் மாயை இந்த முன்று குணங்களில்மனிதர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்த படி அப்போது இருக்கும் உணர்வு நல்லதாகவோ தீயதாகவோ மாறுகிறது . குணம் என்பது இருக்கும் தன்மை ,சுழ்நிலை ,உண்ணும் உணவு ,விரதம் முதலியவை பொருத்ததாகும் ஆயினும் என்றும் சத்துவ நிலையில் இருப்பது ஆன்மீக வாழ்வின் அவசியத தேவை நமது தனிப்பட்ட வாழ்வு ,பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும் . நாம் வாழும் வாழ்வு அமைதியையும் பாதுகாப்பையும் பெறவேண்டுமானால் நமது வாழ்வு நம்மை சுற்றி இருக்கும் உலக வாழ்வுடன் ,பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து இருக்கவேண்டும் . தியானம் என்பது உணர்வை குவிப்பது, உடம்பினுள் உணர்வினை வளர்ப்பது அது மனதை சரிவர கையாளுவது . ஆனால் தனிப்பட்ட வாழ்வு பிரபஞ்ச வாழ்வில் இருந்து வேறுபடுமானால் இது கடினம் ஆகிவிடும் . மனதின் ஆற்றல் ,உடல் ஆரோகியம் இவை அனைத்திற்கும் தேவையான ஆற்றல் பிரபஞ்ச வாழ்விலும் பிரபஞ்ச மனத்திலும் அடங்கயுள்ளன .பிரபஞ்ச ...