*எனக்குப புரிந்தது இதுவே ! (35)*

உண்மையான தியானம் என்று கூறும்போதே
அது என்ன உண்மையான தியானம் ?
அப்போ பொய்யான தியானம் என்று ஒன்று உண்டா ? எனும் கேள்வி எழத்தான் செய்யும் ..
ஆமாம் அப்படிதான் இருக்கும்போலிருக்கிறது ..

உண்மையில் தியானம் என்பது என்ன ?
நாம் அறிந்து கொள்ளவேண்டிய பொருளைப பற்றிய உண்மையை நோக்கி தொடர்ந்து
செல்லும் பயணம் தான் தியானம் ஆகும் .

தொடர்ந்து செல்வது என்றால் எப்படி என நமது சமய நூல்கள் தெளிவாக கூறுகின்றன

தொடர்ந்து என்பது பின்பற்றுவதுஎன்பது மட்டும் அல்ல ,அது ஒரு இடைவிடாத தொடரல் . .
ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்திற்கு எண்ணையை
மாற்றும் பொது அது துண்டு துண்டாக விழாது .

அது ஒரு கம்பியை போல் தொடர்ந்து விழுவது
தான் சீராக விழுவது என்பது ஆகும் ..

ஒழுக்கம் எனும் பெயர் ஒழுகல் எனும் வேரில் இருந்துதான் வந்ததது .

இடைவிடாது கொள்கையைக் கடைபிடிப்பது ஒழுக்கம் .

அதேப் போல் தியானம் செய்ய்பவர்களிடம் இருந்து
தியானம் செய்யப்படும் பொருள் எனும் பாத்திரத்திற்கு தியானம் செய்பவரது எண்ணம்
சீராக ஒரு கம்பி போல் தொடர்ந்து பாய்கிறது .!

தியானம் சீராக நடைபெரும் போது ,
எண்ணுபவர், எண்ணப்படும் பொருள் , எண்ணுவது,
இந்த மூன்றும் ஒரே கம்பியாக மாறிவிடுகிறது .

எனவேதான் தியானம் எப்போதும் நிகழ காலத்தில் இருக்கிறது என்கிறோம் .!

அது இறந்த காலமாகவோ ,
எதிர்காலமாகவோ மாறுவதில்லை

தியானம் எப்போதும் ஒரே நிலை
அது காலம் கடந்தது ,காலத்தை வென்றது .

மனதை படிப்படியாக உயர்த்தி
காலமற்ற நிலைக்கு எடுத்துச் சென்று
காலத்தின் கொடுமையில் இருந்து
மனிதனை விடுவிக்கும் முயற்சிதான்
தியானம் ! அது காலமற்ற நிலையில் செய்யப்படுவது !

தியானம் செய்வதற்கு காலை நாலரை மணியோ மாலை
நாலரை மணியோ ஏதாவது ஒரு நேரம் தொடர்ந்து செய்ய
எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் !.

ஏதாவது ஒரு இடம் தொடர்ந்து
ஒரே இடம் தேர்நதெடுக்கவேண்டும் .
இத்தகையசில ஒழுக்கங்கள் தியானம் உடனடியாக கை கூட உதவி செய்யும் ..

தினமும் ஒரே நேரம் ஒரு மணி நேரம் என்றால் தினமும்
ஒரு மணி தியானம் செய்ய பழகவேண்டும் .

ஒருமணி நேரம் தியானம் செய்பவர்
தியானம் முடிக்கும் போது ஐந்து நிமிடம் தான்
சென்றதாக உணவேண்டும் !
அப்போதுதான் அவர் உண்மையான தியானத்தில் அனுபவித்து ஈடுபட்டிருக்கிறார் எனப்
பொருள் !

அவ்வாறு இல்லாமல் ஐந்து நிமிடம் ஆவதற்குள் ஒரு மணி ஆகி விட்டதா என அடிக்கடி
கை கடி காரத்தை பார்த்துக்கொண்டால்
அவர் தியான அனுபவத்தில் இன்னும் புகவே இல்லை எனப்பொருள் .!

தியான அனுபவத்திற்கு காலவரம்பு கிடையாது
காலம் மட்டுமல்ல இடம் கூட
தியான அனுபவத்தில் மறைந்துவிடும் !
தியானிப்பவரும் மறைந்து விடுவார் !

அப்போது எல்லாம் மறந்து விட்டால்
தியான அனுபவம் பெறுவது எப்பாடி தெர்யும் என்றால்,
தியானம் வசப்படும்போது சில அடையாளங்கள் தோன்றும் !
எந்தப்பொருளை நிறுத்தி தியானிக்கிரோமோ அது தொடர்பான
அழகிய காட்சிகள் முதலில் சில தோன்றும் !

சில சமயம் கடல் அலையின் முழக்கம்
சங்கின் நாதம் , ,நாதசுரத்தின் நாதம்
விவரிக் இயலாத அரும் பெரும் காட்சிகளும் ,
ஓசைகளும் கேட்க்கும் கண்டறியாதன காண இயலும் !

தியான நிலையில் கைகூட ,முதல் படியாக இந்திரிய ஒழுக்கம்
இரண்டாம் படியாக கரணஒழுக்கம்
முன்றாம் படியாக ஜீவ ஒழுக்கம்
நான்காம் படியாக தான் தியான உச்சம் !
இதுவே வள்ளல் பெருமான்
தியானத்திற்கு வகுக்கும் நான்கு பாதைகள் .
அதுவே பதஞ்சலி கூறும் அஷ்டாக யோகமும் ஆகும் !

மனிதனில் ஆன்ம ஒளி எப்போது பிரகாசிக்கும் என்றால் ,
மனிதனின் மன அலைகள் எல்லாம் அடங்கிய பிறகே ஆகும் .
எப்போதும் அமைதியான மன நிலை ஆன்மீக வாழ்வின் அடையாளம்..

ஆனால் தியானம் என்பது வெறும் மன அமைதியை மட்டும் தருவது அல்ல !
தியானத்தின் நோக்கமும் அதுமட்டும் அல்ல !
இந்த அமைதியை ஒரு கருவியாக்கி ,
அதன் மூலம் மனதை அதன் மூலமாகிய
பரமாத்த்மாவின் சன்னதியுடன் இணைப்பதுவே தியானம் ஆகும் !

நமக்கும் மூலத்திற்கும் ஒரு உண்மையான உயிரோட்டமான
பிணைப்பு இருந்தால் தான் உண்மையான தியானம் கைகூடும் !
சிலர் பிறப்பிலேயே இந்தப் பிணைப்பை பெற்றுவிடுகின்றனர் !
கண்ணால் பார்க்காத , அவரைப் பற்றி ஏதும் தெரியாமலேயே
ஒரு பிணைப்பு வந்து விடுகின்றது .!அவர்களே ஜிவன் முக்தர்எனப்படுவர் !

இது காலம் காலமாக ,பிறவிகள்தோறும்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவரும் அவனருளாலே தான்
இத்தகைய பிணைப்பு இப்போது கைகூடுகிறது !
இயபாகவே அவர்களுக்கு மூலத்தின் பால் ஒரு ,அன்பு எனும் பிணைப்பு அமைகிறது !

அவர்கள் கருவிலே திருவுடயோர் !

மற்றவர்களுக்கோ பிரார்த்தனை பூஜை பக்தி
என கொஞ்சம்கொஞ்சம் சேர்த்து அதன் மூலம் வாய்த்த அறிவினால் இந்த
பிறவியில் கொஞ்சம் புருஷார்த்தம் தேவைப்படுகிறது !
பிரார்த்தனையும் ,பக்தியும்
இதய தாமரையை மலரச்செய்கிறது !

பிரார்த்தனையும் பக்தியும் ஆழமான பகுதியை விழிக்கசெய்து
மனதின் எல்லா பகுதியும் தூண்டி
ஒவ்வொரு பகுதியும் தியானத்தின் பலனை பெறச்செய்கிறது !
தியானம் என்பது பிரார்த்தனை ,பக்தியின்
தொடர்ந்த நுண்ணிய ஒரு தொடர்ச்சியே !

முமுஷூ எனும் பயணிக்கு பிரார்த்தனையும்
பக்தியும் இரு ஊன்றுகோல்கள் !
செல்லுமிடமோ தியானம் என்னும்
ராஜப்பட்டைக்கு ,

தியானம் வசப்பட்டபிறகு ஊன்றுகோல்களைத் தூக்கி எறிந்துவிடலாம் .

வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள் ,அது அவர்கள் நிலையைப்பொருத்தது

நிகழ காலத்தில் என்றும் நடை பெறும்
ஜீவாத்த்மா ,பரமாத்த்மா உறவே தியானம் !
அது எப்போதும் நிகழ் காலம் தான் !

பிரார்த்தனையோ பூஜையோகூட நாம்
கடந்த காலத்தில் இருந்து செய்ய முடியாது .
எதிர்காலத்தில் இருந்தும் செய்ய முடியாது .
நிகழ காலத்தில் இருந்து நம்மை மறக்க ஆரமித்ததும்
பிரார்த்தனை தடைபட்டுவிடுகிறது .
ஆக விழிப்புணர்வே பிரார்த்தனையாகும்..
தியானம் என்பது அன்றாட வாழ்வுடன் ஒன்றாகவேண்டும் !
இருவேறு நிலை என்றும் போராட்டம் தான் !
தியானம் என்பது வாழ்வின் போராட்டம் ,எதிர்பார்ப்பு
அத்துனையுடன் பின்னி பிணைய வேண்டும் !

முழுவாழும் அடக்கியதே ஆன்மீக வாழ்க்கை !

ஒருமணிநேரம் மட்டும் ஆன்மீகவாதி என்பது நடைபெறாது .

மற்றநேரத்திலும் செய்யும் செயல்களில் ஆன்மீக நியதிகள் பின்பற்றப்படவேண்டும் .

அவ்வாறு இல்லாமல் வேறு வேறு நிலை உடலிலும் ,மனதிலும் ஒவ்வாத்தன்மை
ஏற்ப்படுத்தி உடலையும் மனத்தையும் வருத்தும் !

அவ்வாறு வருத்தவில்லை என்றால் அந்த ஒருமணி நேரம்கூட

ஆன்மீக வாழ்வு வாழவில்லை என்றுதான் பொருள் .

அர்த்தமற்ற வாழ்வு வாழ நமக்கு நேரம் இல்லை ,

ஆன்மீக நெறியில் புகுந்தபின் ,அதைத்தவிர வேறு எதிலும் நாட்டம்

இருத்தல் ஆகாது .ஆனால் இதில் செய்யும் செயல்கள் எதுவேண்டுமானாலும் இருக்கலாம்

ஆனால் ஆன்மீக வாழ்வு தியானத்தை மையமாக கொண்டு தான் அமையவேண்டும் !

தியானம் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் உயர்வு இல்லை !
இத்தக தியானம் கைகூட அஷ்ட்ட்டாக யோகமும் கைகூட வேண்டும் .
அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் !
இல்லயேல் சருக்குமர விளையாட்டுதான் அமையும் .

ஆன்மீக நெறிகளைப் பின்பற்றும் எந்த உலகியல் செயல்களும் வெற்றிபெறும் .ஆன்மீக வாழ்வில்

அமைதியும் ,ஈடுபாடும் மட்டுமே இருக்கும் .அவசரமும் ஆடம்பரமும் பதட்டமும் அங்கே இராது .

சாதாரணமாக நமது வாழ்வு ஏமாற்றமும் , போராட்டமும் கொண்டதாகத்தான் இருக்கிறது !
அது முதலில் சீர் செய்யப்படவேண்டும் !
எந்த முயர்ச்சியானாலும் முழுமனதான வாழ்வுடன் ஈடுபடுபோதே அதில் வெற்றி அடைய முடியும் !

நமது வாழ்க்கை முறை நமது ஒவ்வரு செயலையும் பாதிக்கிறது .
உற்றுப்பார்த்தால் நமது பிரச்சனைகளுக்கு ,தோல்விகளுக்கு
நாம் சிந்திக்கும் பாங்கு ,
நாம் செயல் படும் விதம்
நமது வாழ்க்கை முறை
இவையே காரணம் என்று தெரியும் .

வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம்
அறிவு மிகுந்தவர்கள் அல்லர் !
ஆற்றல் மிகுந்தவர் அல்லர் !
ஆனால் மிக முக்கியமாக அவர்கள்
வாழ்க்கையை சரியாக புரிந்து வைத்திருப்பவர்கள் !

அவர்கள் முயற்ச்யின் பின்னால் முழு வாழ்வும் இருக்கும் .
முழு ஆளுமையும் இருக்கும் ! முழுமனதும் இருக்கும் .

அரைகுறை மனதுடன் ஏதும் செய்யமாட்டார்கள் .

உலகியல் வாழ்வின் வெற்றிகள் புற சூழநிலையை சார்ந்தது !
ஆனால்புற சூழல்கள் முழுவதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை !

ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் அக உணர்வை பொறுத்தது !
அவனருள் மட்டுமே அதிகம் தேவை ! மீதி அத்தனையும் நமது
ஆளுமை ! நமது முயற்ச்சிகள் .
ஆன்மீக வாழ்வில் போட்டிகள் இல்லை !
புறவாழ்வில் இருப்பது போல் காலைப்பிடித்து
அல்லது இழுப்பது போன்றஇழி நிலை இதில் இல்லை !அங்கே கைத்தூக்கி விடுவதுதான் உண்டு !

தக்க ஒரு குரு ஆன்மீக முயற்ச்சியில் கைத்தூக்கிவிடுவார்கள் .
புறஉலகின் தோல்விகள் அதை பாதிப்பதில்லை !

ஆனால் சிலநிபந்தனைகள் மட்டும்அதில் உண்டு !
முதல் நிபந்தனை தேடல் !தீவிர தாகம் !

இரண்டாவது நிபந்தனை முழு ஆளுமை !
முன்றாவது பிரபஞ்ச வாழ்வுடன் இணைப்பு !

இவ்வ்று தான் வாழும் புற வாழ்வில்
முழு வெற்றி பெற்ற திருப்பதி வந்த பிறகே,
பூரண அமைதி கிடைத்தபிறகே ,
புறத்தே நிகழும் எதுவும் ,எந்த செயலும் , எவராலும்
தன்னை பாதிக்காத மனதின் சமநிலை வாய்க்கும் போதே
ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் கைகூட துவங்கும் .

முதல் மாற்றம் மனதில் ,தன்னில் தோன்றவேண்டும் !
ஆசை பட்டவைகளை அடையத் தெரியவேண்டும் !
அல்லது அடைந்த பின் கிடைக்கும் அமைதி
ஆசைப்பட்டவைகளை அடையாத போதும் அமைதியை ,

எப்படி அடைவது என்று தெரியவேண்டும் !
மனதில் சமநிலை வாய்க்கும் போதே ,
மண்ணில் சொர்க்கம் புலப்படத்தொடங்கும் !

ஆன்மீக வாழ்வு என்றதும் அது வயதானப்போதுதானே வேண்டும்

இப்போது என்ன அவசரம் என்ற எண்ணம் வேண்டாம் .
வாழ்வின் வெற்றிக்கு ,உலகியலில் அமைதியுடனும் ,

திருப்பதியுடனும் நினைத்தவை வெற்றியடைவதர்க்கும் ,

ஆன்மீக நியதிகளை பின்பற்றப்படவேண்டும்

இருவேறு வழிகள் வெற்றிக்குக் கிடையாது .

இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் !

*ஓலைச்சுவடி* *சித்தர்* *அன்புடன் ,*
*அண்ணாமலை* *சுகுமாரன் ஐயா அவர்கள்* ✍️

Comments

Popular posts from this blog

எனக்கு புரிந்தது இதுவே ! (19)-