எனக்கு புரிந்தது இதுவே ! (19)-


*சமஸ்காரம் - ஆசை எனும் வேகம் *

சமஸ்காரங்கள் என்பது முன் அனுபவங்களின் புதைப் பதிவுகள் !
இதில் முறப்பிறவி அனுபவங்களும் அடங்கும் !
இந்த சமஸ்காரங்கள் செயலற்ற மந்தப் பதிவுகள் அல்ல !
இவை சக்தி வாய்ந்த மன ஆற்றல் மண்டலங்களாகும் !

ஓடுகின்ற நதி எப்படி பாறைகளில் முட்டி மோதி
கிளை கிளையாக ஆற்றலுடன் பிரிகிறதோ அப்படியே
மனதில் தோன்றும் எண்ண ஓட்டமும் சமஸ்காரத்தால்
முட்டி மோதி கிளை கிளையாக கிளைததோடுகிறது ! சிதைவுறுகிறது !
இதுவே உணர்வு தடைகள் எனவும் கூறப் படுகிறது !

மேலை நாட்டு உளவியல் அறிஞர் பராய்டு மனம் பற்றி இரண்டு

முக்கிய முடிவுகளை கூறுகிறார் ! ஒன்று மனம் முழுவதும் நம்
உணர்வாதிக்கத்தில் இல்லை ! ஒரு சிறு பகுதியின்
செயல் பாடுகளையே நாம் உணர்கிறோம் ! உணரும் பகுதியை
உணர்வு பகுதி எனவும் , உணர்வாதிக்கத்தின் கிழ் இல்லாத பகுதியை
உணர்வறு பகுதி என்கிறார் !

இரண்டாவது உணர்ச்சி வேகங்கள் எப்படி நம்மை ஆட்டிப் படைகின்றன
என்பதை பொதுவாக நாம் உணர்வதில்லை ! ஏன் எனில் இவை உணர்வு பகுதிக்கு
வராமலேயே தடுக்கப்படுகிறது ! இதை உணர்வறு தடை என்கிறார் !

உதாரணமாக நமக்கு கோபம் வருகிறது அதை அடக்குகிறோம் ,
இது நம் உணர்வுடன் நடைபெறுகிறது ! இது உணர்வு தடை !
இதுவே உணவறு பகுதியில் நடை பெறுமானால் அது உணர்வுறு தடை !
ஆனால் அவர் இதற்க்கு காரணம் என்ன எனக் கூறவில்லை !

இதையே நமது சித்தர்களும் ரிஷிகளும் உணர்த்திருந்தனர் !
அவர்கள் நம் மனம் முழுவதும் உணர்வற்ற ஜடம் என்றனர் !


ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் ! ஆன்மாவின் ஒளியால்
ஒளிர்கின்ற பகுதியே நம் மனதின் உணர்வு பகுதி !

தமஸ் மேலோங்கிய எஞ்சிய உணவுறு பகுதி சித்தம் எனப் படுகிறது !
இதில் ஆன்மாவின் ஒளி படுவதில்லை ! இந்த உணர்வுறு பகுதியில் தான்
சமஸகாரங்கள் புதைந்துள்ளன ! இந்த சமஸ்காரத்தை துணை கொண்டுதான்
சித்தம் முடிவுகளை எடுக்கிறது !

அந்த சித்தத்தை நீக்குவதே யோகம் !

இதையே பதஞ்சலி யோக சூத்திரம் முதல் சூத்திரமாகக் கூறுகிறது .

சித்தத்தை அழிப்பதே யோகம் !

ஒழிப்பதற்க்குபதில் அதில் ஆன்மாவின் ஒளி பட செய்தால்

அது மனதின் உணர்வுப் பகுதியாக மாறிவிடுகிறது .
சித்தத்தில் ஆன்மாவின் ஒளி படச்செய்வதே யோகம் !

மொத்தத்தில் மனதின் முழுவதிலும் ஆன்மாவின் ஒளி பட செய்வதே யோகம் !

இதைத்தவிர சத்துவ குணம் மேலோங்கிய வேறு ஒரு பகுதி மனத்தில் உள்ளது !
இதுவே உயர்த்து ! இதுவே புத்தி எனப் படுவது ! ஆன்மீக பேறுணர்வுகள்
இங்கிருந்துதான் தோன்றுகின்றன ! இதுவே ஆன்மா !

மனதின் இருபுறமும் சித்தி புத்தியுடன் விளங்குவதை இரு மனைவியாக உருவகப்படுத்தியதே

சித்தி புத்தி விநாயகர் ! இதை பூரணமாக உணர்ந்து கொண்டால் எந்த விக்னகமும் இல்லை

சமஸ்காரத்தை இருவகையாக பிரிக்கிறார் பதஞ்சலி !
கர்மபீஜம் ,வாசனை இவை இரண்டும் சமஸ்காரத்தின் வகை !
கர்மபீஜம் ஆசைகளையும் ,உணர்ச்சி வேகங்களையும் தூண்டுகிறது !
வாசனை நினைவை எழுப்புகிறது !

ஒவ்வொரு செயலும் மனதில் ஒரு சமஸ்காரத்தை கர்ம பீஜத்தை உண்டாக்குகிறது !
அந்த சமஸ்காரங்கள் எழும்போது நாம் அதே செய்யலை
செய்யத் தூண்டப் படுகிறோம் ! இந்த தூண்டுதலையே நாம் ஆசை , வேகம் எனக்
கூறுகிறோம் ! செய்யும் ஆயிரம் செயலுக்கு தக்க கர்மபீஜம் சேர்கிறது .
இந்த கர்மபீஜத்தின் மொத்த தொகுதியே கர்மாசயம் எனப் படுகிறது !

கர்ம பீஜம் என்பது செயல்களின் சுருக்கம் ,அதன் விதை !
விதைகளின் மொத்த பத்தாயம் கர்மாசயம் எனப்படுவது-அதுவே

விதியாகவும் அமைகிறது ! விதைக்கேற்றபடியே அதன் விளைவும் ,
அதுவே மாறாத விதி ! .
அடுத்த பிறவி ,அதற்கேற்ற உடல் ஆயுள் ,அனுபவங்கள்
அதனையும் கர்மாசயம் முடிவு செய்கிறது .

ஒவ்வொரு செய்யலும் , ஒரு அனுபவத்தை நம்மிடம் உண்டாக்குகிறது !
ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு சமஸ்காரத்தை மனதில் உருவாக்குகிறது !
இந்த அனுபவத்தின் சமஸ்காரம வாசனை எனப் படுகிறது !

புரிகிறதா ? செயலின் சமஸ்காரம கர்மபீஜம் !
அந்த செய்யலால் நாம் பெறும் அனுபவத்தின் சமஸ்காரம வாசனை !

செயல் ஆசையை தூண்டுகிறது ! செய்யசெய்ய ஆசை !
அனுபவம் வெறும் நினைவை தூண்டுகிறது ! நினைவுடன் நின்றால்
தப்பில்லை ! ஆனால் வேகம் கெடுக்க வேண்டும் !
வாசனையும் கர்மபீஜத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டும் !

செயலும் அனுபவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை !
ஒன்று தூண்டப்பட்டால் அது மற்றதை தூண்டுகிறது !
இவ்வாறு செய்யலும் அனுபவமும் , கர்மபீஜமும்
வாசனையும் முடிவின்றி சுற்றி சுழலும் வட்டத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது !
ஆன்மீக வாழ்வின் முக்கிய நோக்கம் இந்த வட்டத்தை துண்டிப்பதே !

இந்த வேகங்களும் நினைவுகளும் பிணைவது, அதாவது
கர்மாசயமும் வாசனையும் இணைவதுதான் நம் பிரச்சனை !


இந்த ஆசை மனத்தின் உணர்வுறு பகுதியில் இருந்து
நினைவுகளின் மேல் பாய்ந்து பற்றிக்கொண்டு
மனதின் உணர்வு பகுதியில் தோன்றுகின்றது !


இது நிகழ்ந்ததும் இந்த செய்யலால் ஏற்ப்பட்ட
கடந்த கால வடுக்களை பற்றியோ ,
எதிர்கால விளைவுகளைப் பற்றியோ ,
சிறிதும் சிந்திக்காமல் ஒரு அடிமையைப் போல்
அந்த செய்யலை மீண்டும்மீண்டும் செய்யகிறோம்!

இதற்க்கு என்னதான் வழி ?
நினைவு -வேக பிணைப்பை எப்படிதுண்டிப்பது ?
வழிஇல்லாமலா இருக்கும் ?
இதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம் ?

இவைகள் மிக முக்கியமானபகுதிகள் மனத்தின் மர்மத்தை விடுவிக்கக்கூடியவை .

எனவே இதை மீண்டும் ஒருமுறை படிப்பதனால் ஒன்றும் தப்பில்லை !🙏

ஓலைச்சுவடி சித்தர்
அண்ணாமலை சுகுமாரன் ஐயா அவர்கள் ✍️

Comments