*எனக்கு புரிந்தது இதுவே ! (37)-*

வேதத்தில் இருந்து கூறப்படும் 'தத்துவமசி' போன்ற மகா வாக்கியங்கள் போல்
புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது .அவர்கள் கூறிய அருளுரையில்
இருந்து இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன்
அது ' அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள் ' என்பதுவே
.ஆகும் .
இதுவே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்து காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான
காரணத்தை கூறவல்லது ஆகும்

உண்மையில் எல்லோரும் சொல்வது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்பொருத்தோ ,நமது எண்ணங்களை பொறுத்தோ ,நமது தேவைகளின் பொறுத்தோ , நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோமட்டும் நமக்கு நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை .நமது அறிவுக்கும் நடக்கும் காரியங்களுக்கும் தொடர்பில்லை .

ஆனால் நமது அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே
காரியங்கள் நடைபெறுகின்றன .உணர்வு என்பது அறிவல்ல !
வேண்டுமானால் அறிவின் விளைவு நிகழ்வைக்கூறலாம் .

எப்படி சந்தோஷமாக எப்ப்போதும் இருப்பது என தெரிந்திருந்தாலும் .,அந்த தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகிவிடுமா ? .
சந்தோஷமாக உணரவேண்டும் .
அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது .
எது உணர்கிறது .
மூளையா ? மனதா ?

மனம் தான் உணரவேண்டும் .அதற்க்கு மனத்திற்கு முன்பே சந்தோசம் என்பது என்ன என
தெரிந்திருக்கவேண்டும் .அப்போது தான்அதை உணரமுடியும் .
சக்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சக்கரையை இனம் காண முடியும் .
முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது .அது ஒவ்வரு பிறவியிலும் ,ஒவ்வருநாளும்
பெறும் அனுபவத்தை சேகரம் செய்வது .


உறங்கி விழிப்பதுதானே சாக்காடு ,
மீண்டும் வரும் பிறவிகளும் சிறிது நீண்ட தூக்கம் தூங்கி எழும் புதிய நாள்போல்தான் ஆகிறது .
வாசனை குறிந்தும் ,விருத்தியை குறித்தும் ,மனம் என்பதின் பல கூறுகளைப்
பற்றியும் , சமஸகாரம் பற்றியும் முன்பே விரிவாக பார்த்திருக்கிறோம்.

இதில் அக உணர்வை வளர்த்துகொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும் மிக
முக்கியமானதாகும் .நல்ல உணர்வுகள்என்பது அன்பு ,பக்தி
சந்தோசம் , பரிவு ,பெருந்தன்மை , மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .
தீய உணர்வுகள் கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் முதலியவையாகும் .

கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் போன்றவற்றின் பலனை ஏறக்குறைய
நாம் உடனே உணர்ந்து விடலாம் .நாம் கோபமாக பேசினால் ,பதிலுக்கு என்ன கிடைக்கும்
சாதாரணமாக கோபமே,கோபம் கலந்த பேச்சே திருப்பிக் கிடைக்கும் .
நாம் பெறும் அனுபவங்கள் அறிவாக மனதில் சேமிக்கப்பட்டு முளையின் மூலமாக
அவை செயல் படுகிறது .

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல் .
ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .
நாம் உணர்வில் செயல் படும் போது ஆன்மாவின் ஒளி அதன் மேல் படுகிறது .

ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் .
ஆன்மா விழிப்பின்றி உடலாலோ மனதாலோ செய்யப்படும் செயல்கள் எல்லாம்
தன்னுண்ர்வற்ற தன்னறிவற்ற நிலையிலேயே நடை பெறுகிறது .

உணர்வுடன் செய்யும் போதே அங்கே ஆன்மாவின் ஒளி படுகிறது .
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ,அதாவது நம்மை சுற்றி இருக்கும் ஸ்துல
பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இந்த உடல் இவையாவையுமே
உணர்வற்றவை .இது தோன்றா நிலையில் இருக்கும் மூலம் தான் .

ஸ்துல பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இவ்வை இரண்டுமே அதன் இரு
வெளிப்பாடுதான் .
ஆன்மாவின் ஒளி படும் போதுதான் அவை ஒளிருகின்றன .
அனால் ஆன்மா ஒரு சுயம் ஜோதி .
உணர்வையும் ,உணர்வின்மையும் வேறுபடுத்திக்காட்டியது பாரதத்தின் பெரும்
ஞானிகள்தான் .இது ஒரு சாதனைத்தான் .
இந்த வேற்றுமை உணர்வுதான் ஆன்மீக வாழ்விற்கு மிகவும் தேவைப்படுவது .

நம் உடலில் ரத்த ஓட்டம் ,உணவு ஜீரணித்தல் ,சக்தி உடலெங்கும் பரவுதல் முதலியன
நமது நினைவின்றி ,உணர்வின்றிதான் நடக்கிறது .

நமது மனத்தை ஊன்றி கவனித்தால் ,அதில் எழும் எண்ணங்கள் பெரும் பகுதி நமது
உணர்வின்றி நடப்பது புரியும் .

நாம் பேசுகிறோம் , கேட்கிறோம் ,நடக்கிறோம் , படிக்கிறோம் ,உண்கிறோம்
,கார் ஓட்டுகிறோம் இவற்றில் பெரும்பாலானவை தன்னறிவில்லாதுதான் செய்கிறோம் .
உணர்வு இருப்பதில்லை .

நாளில் பெரும் பகுதியை உணர்வற்று கழிக்கும் நாம் அதை மனதின் போக்கிற்கே
விட்டுவிடுகிறோம் .மனமோ அதில் இருக்கும் வாசனை ,சமஸகாரத்தின் படி உணர்வின்றி
,தன்னறிவிற்றி செயல்படுகிறது .
தியானத்தில் அமர்வதும் அத்தகைய ஒரு நிலையிலேயே அமைகிறது .
தியான வேளையில் அமர்ந்த உடனேமனம் அடங்கிவிடும் என எதிர்ப்பார்க்கிறோம் .அது
எப்படி இயலும்

நாம் தன்னுணர்வு மிக்கவர்களாக ஆவது நாம் எந்த அளவு ஆன்மாவை சார்ந்திருக்கிறோம்
என்பதை பொறுத்திருக்கிறது .


நாம் தன்னுணர்வு பெற்றவர்கள் ஆகும் போது நமது எண்ணங்களும் செயல்களும்
நமது கட்டுப் பாட்டில் வருகிறது .

இந்த உலகில் நாம் எதையாவது அடையவேண்டுமானால் அதற்கான குறிப்பிட்ட உணர்வு நிலையை அடைய வேண்டும் .
பாவித்தால் போதும் என்பது இதைத்தான் .

இந்த உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி இவை அடங்கிய மனதை அதன் ஆற்றலை
பிராணனே நிர்ணயிக்கிறது .அதன் ஆற்றலே இயக்குகிறது .
பிராணன் இடகலை எனும் சந்திர நாடி வழியாக மேல் இழுவதும்
பிங்கலை வழியாக கிழே வருவதுமாக இயங்குகின்றது .
இதில் பெறும் ஆற்றலின் ஒரு பகுதி உடலையும் இயக்குகிறது .
மனதின் உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி ஆகிய இருபகுதியையும் இயக்குகிறது .

பிராணன் இந்தப் பிரபஞ்சம் எங்கும் விரவி பரவி இருக்கிறது .அது வெறும் காற்று
அல்ல . பிராணாயாமத்தின் மூலம் இந்த நாடிகளை கட்டுப்படுத்தவும் இயைந்து செயல் படியும் இருக்கசெய்ய முடியும் .
தியானத்தின் மூலம் தன்னுணர்வில் இருக்க முடியும் .

பிராணன் கட்டுப்படும்போது சமஸகாரம் தூண்டப்படுவது குறைகிறது .
மனம் அமைதி பெறுகிறது தியானம் கைகூடுகிறது .நாம் ஆன்மாவிற்கு
அருகில் செல்ல முடிகிறது .
தீவர பக்தி ஆன்ம விசாரம் ,ஜபம் இவைகளின் மூலமும் மனதை அமைதியுற செய்ய முடியும்
.
ஜபமும் ஒரு வகையில் பிராணாயாமம் போன்றதே அப்போது மூச்சு மென்மையாகிறது .

இடகலையும் , பிங்கலையும் தண்டுவடத்தின் கிழுள்ள மூலாதாரத்தின் இட ,வல
பக்கத்தில் இருந்து தொடங்கி ஒன்றை ஒன்று பின்னி , இவ்வாறு வளையத்தை
ஒவ்வரு சக்கரத்தை சுற்றியும் உண்டாக்கி மேலே செல்கின்றன .
வழியில்அவை மூன்றுமுறை இணைகின்றன
இவ்வையே அரசமரத்தடியில் பின்னிய நாகங்களாக வடிவமைத்து வணங்கப்படுகின்றன .
இது கிரந்திகள் அல்லது முடிச்சுகள் எனப்படும் .

இவை பிராணனின் ஓட்டத்தை தடுக்கும் தடையாக கருதப் படுகிறது .
இந்த முன்று முடுச்சுகளும் மனதின் மூன்று நிலைகள் ,

மூன்று முடிச்சுகள் . .
முதலில் வருவது பிரம கிரந்தி
இது தொப்புளுக்கு கிழ் உள்ளது
பிராணன் இங்கு தேங்கி தடைபடும் போது
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும்
அடிமைப்படுகிறது .

இரண்டாவது விஷ்ணு கிரந்தி
இது இதயத்துக்கு கிழே உள்ளது
இதுதான் உணர்ச்சி மையம்
மனிதனின் உணர்ச்சிகள் இங்கிருந்துதான் பொங்கிப் பெருகுகிறது .

மூன்றாவது ருத்திர கிரந்தி
இது புருவமத்திக்கு கிழே உள்ளது .
இதுதான் அறிவின் மையம் .

பிராணன் உணர்ச்சி மையத்திர்க்கும அறிவு மையத்திர்க்கும மிகுதியாக போக
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும் அதிகம் செலவாகாமல்
மேலே செல்லவேண்டும் .

இந்த மூன்று முடிச்சும் வாழ்வை மூன்று நிலைகளாக
பிரிக்கிறது .

இயல்புணர்ச்சி வயப்பட்ட வாழ்வு .
உணர்ச்சி வயப்பட்ட வாழ்வு
அறிவு ( ஞானம் )உணர்வு வயப்பட்ட ஆன்மீக வாழ்வு


இதில்உணர்ச்சி ,வேறு உணர்வு என்பது வேறு என்பதை கவனிக்கவேண்டும் !
இயல்புணர்ச்சி, உணர்ச்சி அறிவு
இவ்வைகளுக்கு இடையே ஆன போராட்டம் அமைதி அடைந்த பின்பே பிராணன்
இரு நாடிகளிலும் தாராளமாக சென்று வர முடியும் .

அதன் பின்புதான் சுழு முனை நாடிஎன்பதை கண்டு பிடிக்கவும் ,அறியவும் முடியும் .
பின்புதான் ஆன்மீக வாழ்வு ஆரம்பம் ஆகும் .
இதற்க்கு பிராணாயாமம் மிக அவசியமாகும் .
பிராணாயாமம் இன்றி ஆன்மீக வாழ்வு கைகூடாது .
சிலருக்கு இயற்கையிலேயே சில பிராண ஓட்டம் அமைவதுண்டு .
தொடர்ச்சி அடுத்த பகுதி

சற்று கடினமாகத்தொன்றக்கூடும் ,ஆனால் உணர்வுடன் ,

நிகழ்காலத்தில் இருந்து இதை படித்தால் இதன் நுட்பங்கள் எளிதில் விளங்கக்கூடும் .

என்னால் இயன்றவரை புரியவைக்கவேண்டும் எனும் உணர்வுடனேயே ,பண்டிதத்தனம்

இலாது இயல்பாக எழுதவே முயல்கிறேன் .

இதில் ஏதாவது புரியவில்லை எனில் எனக்கு இன்னம் திறன் வளரவில்லை என்றப் பொருள் .
மீண்டும் விரைவில் சந்திப்போம் ,தொடரின் இறுதிப்பகுதிக்கு நெருங்கிக்கொண்டு இருக்கிறோம்..💐

*அன்புடன்*
*ஓலைச்சுவடி சித்தர்*
*அண்ணாமலை சுகுமாரன் ஐயா அவர்கள்* ✍️

Comments

Popular posts from this blog

எனக்கு புரிந்தது இதுவே ! (19)-