*எனக்கு புரிந்தது இதுவே ! (34)-*

*சென்ற பதிவில் காலம் ,இடம் இவைகளைப்பற்றிப்பார்த்தோம் .*

நான் கூறியவை உங்களுக்கு எந்த அளவிற்கு பயனாக இருந்தது என்று எனக்கு சரிவர புலப்படவில்லை .இன்னும் கொஞ்சம் அவைகளைப்பற்றி மீண்டும் பேசுவோம் .

பரிணாம வளர்ச்சியை சற்று கவனமாக ஆழ்த்துப பார்த்தோமானால்
இயற்கையுடன் நடக்கும் போராட்டம் தான் அதன் மாற்றத்திற்கு
காரணமாக அமைந்து இருக்கிறது என்பதுபுலப்படும் .
எப்போதும் எல்லா உயிர்களும் தம்மை மேம்படுத்திக்கொள்ள சதா முயன்றுவருகின்றன .

இயற்கையுடன் சதா ஒரு போராட்டம் நிகழ்ந்துதான் வருகிறது .
எல்லா உயிர்களும் தம்மை மாற்றிக்கொள்வதன் மூலமே
இயற்கையை எப்படியாவது வெல்லுகின்றன .!

அதேப்போல் ஒவ்வருவரும் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலமே
சூழ்நிலையால் வரும் தீமையை வெல்லமுடியும் .!
சூழ்நிலை என்பது நமதிஷ்ட்டதால் வருவதில்லை ..

சூழ்நிலைகளை அப்படியே ஒப்புக்கொண்டு நாம் சும்மாஇருந்திடவும் இயலாது

எல்லா உயிரினமும் மாற்றத்திற்கு முயலும் போது நாமும் ஒருபடி மேலேப் போக முயலவேன்டாமா ?அப்படியானால் நமது சூழ்நிலைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது ?

வாட்டும் வறுமையையில் இருந்து எப்ப்டி வெளிவருவது ?
தொடரும் துன்ப சூழ்நிலையை எவ்வாறு மாற்றுவது என்றால் எல்லா சூழ்நிலையையும் நம்மால் மாற்ற முடியாது .!

இதை நாம் ஒப்பு கொள்வதும் புரிந்து கொள்வதும் தான் நல்லது !
இதை புரியவைக்கத்தான் கர்ம பலன் ,சமஸ்காரம் என
பல தத்துவகளை இதுவரை பார்த்தோம் .
ஆனால் மாற்றம் என்பது ஒரு படிபரிணாம வளர்ச்சியில் முன்னேபோகும் ,மனிதனில் இருந்து தேவனாகும் வழியில் இருக்கவேண்டும் .அகநிலை மற்றம் வேண்டும் .புரத்தில் வநது சேரும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டால் அவை ,நமக்கு அத்தனை துன்பமாக இராது .

இந்த சூழ்நிலை நமக்கு வாய்ப்பதே நாம் பெறவேண்டியப்பாடத்தை பெறுவதகாகத்தான் .

நாம் இப்போது படித்துக்கொண்டிருப்பதும் நம்மிடையே ஒரு சரியானப் புரிதலை உண்டாக்கத்தான் .

ஆனால் நம்மிடம் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் படிப்பது எதுவும் நமக்கு சம்பந்தம் இல்லை என நினைப்பதே !

பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!

படித்து கொண்டே இருப்பவன் படித்துக்கொண்டே தான் இருக்கிறான் .
அவனுக்கு அதில் கிடைக்கும் இன்பம் மட்டும்
போதுமானதாக இருக்கிறது .இன்னும்
அதிகப்படியாக அதைப்பற்றி பேசி பேசி வேறு இன்பம் அடைகிறான் !
ஆனால் அவனது பூர்வ கர்மபலம் படி அவனது ஜீவிதம் அமைகிறது ,

இப்பிறவியின் புருஷார்த்தம் அவன் மேலே மேலே படித்து
மேலும் சில மடிப்புகளை மூளையில் பெருக்கிகொள்வதில் தான் முடிகிறது !
இந்தப் படிப்பு அடுத்தமுறை படிக்கும் போது அவனுக்கு சுலபமாக
புரியவைக்கும் ! ஆனாலும் அவன் அதை உணராதவரையில்
அதை தனது வாழ்வில் பொருத்தி அதை ஒரு அங்கமாக ஆக்காத
வரையில் அவனுக்கு அந்தப்படிப்பால் ஏதும் ஆதாயம் இல்லை !

ஆனால் படிப்பதனால் வரும் அகங்காரம் மட்டும்
மேலும் மேலும் சேர்ந்து கொண்டே வரும் !
அவனை அலட்டவைக்கும் !பிறரை அதிகாரம் செய்யும் !
பார்த்தாயா என் அறிவை, நானே அடக்கமாக
இருக்கிறேன் என வெளிச்சம் போடும் !
பின் மதிக்கவில்லை என கூச்சல் போடும் !
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதும் ,
அடுத்தவரின் பொறாமையை பெறுவதிலேயும் தானே
நமது வாழ்வின் வெற்றி உள்ளது என நினைக்கிறோம் இது தானே நமது வெற்றியின் இலக்கணம்எனக்கருதப்படுகிறது !
அப்படித்தானே உலகம் நினைக்கிறது !

videocon விளம்பரம் நினையில் உள்ளதா ? அது எப்போதும்
அடுத்தவர் பொறாமை படும் T. V வாங்க உங்களை தூண்டும் !

நாம் உண்பது உடுப்பது ,பிள்ளைகளை படிக்கவைப்பது ,
அவர்களை வாட்டி வதைத்து அவர்களின் இளமையை தொலைத்து ,
அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைத்து பெரியவேலையில் சேர்த்து பெரிய சம்பளம் வாங்க வைப்பது எல்லாம்
அடுத்தவர் மெச்ச வாழ துடிக்கும் அவாதானே !

நாம் பிறந்த பிறவியின் பலன் என்ன என்பது
நமக்கு நினைவில் இருப்பதில்லை !
நடப்பது எல்லாம் சென்ற பிறவியில் சேர்த்துவைத்த
இருப்பின் செலாவணிதான் ! ஆனால் பெருமை
மட்டும் எல்லாம் என் திறமையால் ,அறிவால்
வந்தது என சொல்லிசொல்லி நம்மை மெச்சிக் கொள்கிறோம்

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
இன்னும் அழுக்கு சட்டையுடன் சுற்றுவது நினைவில் வராது .

ஆனால் அவர் சொல்லிக்கொடுத்த கல்விதான் நம்மை காசு சம்பாதிக்கவைத்தது என நினைக்கிறோம் .

நம்முடனேயே ப படித்த நம்மைக் காட்டிலும் நன்றாகப்படித்த எத்தனையோ பேர் இன்னமும் செல்வ நிலையிலும் ,பெரும் புகழிலும் கிழே இருப்பது நம் நினைவிற்கு வராது .

நாம் மட்டும் ஒருத்தனிப் பிறவி ,மேதை என நினைப்போம் .

நமக்க௮உ வாய்த்திருக்கும் நல்ல சூழலை வைத்து மேலேப்போகும் ,அதை மட்டும் மறந்து ,அந்த செல்வம் தரும் இன்பத்தில் வரும் கசடுகளால் ,இன்னமும் சுமையை சேர்ப்போம் .

நல்ல சூழல் அமைவது நமக்கு கிடைத்த வரம் ,ஆனால் நாம் வந்தது இன்னமும் மேலேப்போக .



ஏப்போதும் நமக்கிருக்கும் ,இடப்பட்டிருக்கும் ,சுதர்மம் எனும் கடமையை செய்யவேண்டியதான் !
கூடவே தனக்கும் கொஞ்சம் அடுத்தப் பிறவிக்கு என
சேர்த்துவைப்பது தானே நல்லது ! காஞ்சி பெரியவர்
முன்பெல்லாம் பார்ப்பவரை எல்லாம் கேட்டும் கேள்வி உனக்கு
என்ன செர்த்துவைதிருக்கிராய் ? என்பது தான் !

அப்போது வந்து வாய்த்த சுழ்நிலையில் அதனுடன்
சகித்துத்தான் வாழ வேண்டுமா ? வேறுவழி இல்லையா எனில் ,
கடலில் வாழும் சிறிய மீன் கூட தொடர்ந்து தன எதிரிகளால்
உண்ணப்படும் போது அது அதனிடம் இருந்து தப்ப முயல்கிறது !

அது கடலையோ ,தன எதிரிகளையோ மாற்ற முயற்சி செய்வதில்லை
மாறாக தொடர்ந்து உயரே பறந்து தப்பிக்க எண்ணுகிறது
பரிணாம வளர்ச்சியில் அது சிறிய இறக்கையை அடைந்துவிடுகிறது !
வளார்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ள மனிதனால்
சூழ்நிலையின் கொடுமையில் இருந்து மாற முடியும் !
அல்லது அதன் கொடுமையை உணராதுஇருக்குமாறு மாறமுடியும் !
அந்த வித்தையைவாழும் போதே பயிலமுடியும் ! பிறப்பு இல்லாத
இறப்பையும் கூடவே அடையமுடியும் !

ஆனால் அவன் சூழ்நிலையை மாற்ற முயல்வதை விடுத்து
அவன் தன்னை மாற்றிக்கொளவேண்டும் !
உலகத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கக் கூடாது !

உலகத்தையோ ,சூழ்நிலையையோ குறைகூறிக்கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது .

இயன்றவரை ,இருக்கும் சூழ்நிலையில் ,அதிகபட்சம் எனன நல்லவைதனக்கு

செய்து கொள்ளமுடியுமோ அதைத் தொடர்ந்து செய்துவரவேண்டும் .

என்றும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் .தளர்ந்துவிடக்கூடாது .

இந்தக் கோணத்தில் இருந்து பிரச்சனைகளை அணுகுவதுதான்
பிரச்னையை நீக்கும் வழியாகும் !]

கோபத்தையும் ,வெறுப்பையும் அலச்சியம் செய்யும் மனவலிமையை
நாம் பெற்றுவிட்டால் , நாம் கோபமோ வெறுப்போ அடைவதில்லை !
மாறாக கோபத்தை வெறுப்பை அழிப்பேன் என அதனுடன்
போராடுவது நமக்கு தளர்வையும் தோல்வியையுமே தரும் !

ஆகவே வெற்றியடைய ஒரே வழி
நம்மை முழுமை ஆக்கிக்கொள்வது தான் !
முழுமையடைய முதலில் முழுமையாக
நம்மை புரிந்து கொள்ளவேண்டும்.

நம்மை நாம் சரிவர புரிந்து கொள்ள நாம்
ஆன்மீக வாழ்வில் உயர்ந்த படிக்கு செல்லவேண்டும் .
ஆன்மிகம் என்பது உணர்வுடன் வாழ்தல், விழிப்புணர்வு தான் .


அந்தப்பாதையில் பல படிகள் உள்ளது ,இயமம் நியமம் என அஷ்டாங்க யோகத்தை
நமக்கு பதஞ்சலியும் திருமூலரும் அருளியிருக்கிறார்கள் !
இதில் தியானம் என்பது மிக உயர்ந்த நிலை அந்த நிலையை அடைவதற்கு
சில தகுதிகள் மனத்தளவிலும்
உடல் ரீதியிலும் தேவை
சில நிபந்தனைகள்கூடவே நிறைவேற்றப்படவேண்டும் !

தியானத்தை இருவகையாக பிரிக்கலாம் ,
உலகியல் தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு..

*இரண்டாவது ஆன்மீகத் தியானம் .*

மனதை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது
உலகியல் தியானம் எனப்படும் .கருத்தூர்ன்றி ஒரு கதைப்புத்தகம் படிக்கும் போது கூட சில
சமயம் இந்த நிலை அமைத்து விடுகிறது .
மனம் இயல்பாகவே வெளியே செல்லுமாறு
படைக்கப்பட்டிருப்பதாக கடோபநிடதம் கூறுகிறது .

எனவே புறப்பொருள் மேல் பற்றி அதில் மனதை
குவிப்பது சற்று சுலபம் தான் ! மனதை புறத்தே இருக்கும்
எந்த பொருள் மேல் வேண்டுமானாலும் சுலபமாகவேக் குவிக்கலாம் !
இதனால் மன அமைதி கிடைக்கும் ! எண்ணத்தின் கொதிப்பு அடங்கும் !
இதனால் உடல் நலம் கிடைக்கும் ,
ரத்தக்கொதிப்பு குறையும் ,உணர்ச்சிகளின் கட்டுப்பாடு கிடைக்கும் !
இதுவே உலகியல் தியானம்.
அதுவும் பெருமைக்குரியதே .

ஆன்மீக தியானம் என்பது மனதை அதன் உண்மையான
பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது.
வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாக்கி
அதன் இருப்பிடத்தை நாடச்செய்வதே .

ஆன்மாவின் ஒளியால்தான் புறத்தில் இருக்கும்
பொருள்களையும் , மனத்தில் எழும் எண்ணத்தின்
ஓட்டங்களையும் நாம் உணரமுடியும்.
ஆன்மாவின் ஆன்மாவான இறைவைனை
காணவேண்டிடின் அந்த ஆன்மாவின் ஒளியை
உள்பக்கமாக செலுத்தவேண்டும் அதுவே
ஆன்மீக தியானம் .

அங்கும் இங்கும் புறேத்தே பாயும் மனம் என்னும்
அடங்காப்பிடாரியை உள்முகமாக்குவது அத்துணை சுலபமா எனன ?
மனத்தைதிருப்பி அதை உள்ளேக்குவிக்க நமக்கு
அகத்தே ஒரு இடம் வேண்டுமே ! உடலின் எந்த இடத்தில்
அகத்தில் குவிப்பது ?
அந்த மையம் இன்னும் நம்மில் உருவாகவில்லை !


பலருக்கு இது புதிராக இருக்கலாம் !
அந்த மையம் தான் இதயம்.
இதய தாமரை ! அதுவே ஆன்மீக இதயம் !

அங்குமட்டுமே உண்மையில் தியானிக்கமுடியும்.
நம்மில் பலருக்கு இந்த ஆன்மீக இதயம் இன்னும் மலரவில்லை !
இன்னும் மொட்டாகவே இருக்கிறது !
அதை முதலில் மலரச்செய்யவேண்டும் !
மலர்ந்த பின் அதை மேல்நோக்கி நிமிரச் செய்யவேண்டும் !
அதற்க்கு ஜபம் பக்தி பிரார்த்தனை ,பிரமச்சரியம் போன்ற நிபந்தனைகள்
நிறைவேற்றப்படவேண்டும் .
அஷ்டாங்க யோகமும் முறைப்படி சாத்னமாகவேண்டும் !
தக்க ஒரு குரு தொட்டுக்காடவேண்டும் !
அஷ்டாக யோகமும் முறைப்படி நிறைவேறும் போதே
அஷ்டமா சித்திகளும் உடம்பில் குடி கொள்ளும் !
ஆனால் சித்திகள் சாதகனின் சித்தமலவே !🙏

*மேலும் தியானத்தைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் !*
*கூடவே பயணித்தற்கு நன்றி ! கூடவே ஒரு சொல்* *கூறினால்நீங்கள் கூடவே*
*வருவதும் என்க்கும் புரியும்*.

*அன்புடன்*
*ஓலைச்சுவடி* *சித்தர் அண்ணாமலை* *சுகுமாரன் ஐயா அவர்கள் ✍️*


Comments

Popular posts from this blog

எனக்கு புரிந்தது இதுவே ! (19)-