*எனக்கு புரிந்தது இதுவே ! (32)*
*செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை*,
ஒவ்வருவரின் வாழும் வழி அதுதான் .
ஏழ்மையுடனும் வறுமையுடனும் வாழச்சொல்லி இறைவன் எங்கும் கூறவில்லை .
வாழ்க்கை ஆனந்த மயமாக இருக்கவேண்டும்
ஏன் எனில் ஆண்டவனும் ஆனந்த மயம் தான்
ஆண்டவன் படைத்த இவ்வுலகின் உயரிய
படைப்பான மனிதனும் ஆனந்த மயமாகத்தானே
இருக்கவேண்டும் .
தகப்பனைப் போல்தானே பிள்ளையும் இருக்கவேண்டும் .
நாம் இறைவனின் படைப்பு ,
நாம் ஆனந்த மயமாகவே இருக்கவேண்டும்
அதுவே இறைப் பண்பு .
நாம் அடுத்தவரை ஆனந்தப்பட வைத்தால்
இறைவனின் பணியை சற்று குறைத்தவர் ஆவோம்
அவர்வேலையை நாம் பார்த்தால்
நம் நலனை இறைவன்நிச்சயம் பார்த்துக்கொள்வார்
நாம அடுத்தவரை ஆனந்தப் படுத்தினால்
நம்மை யாராவது ஆனந்தப் படுத்துவார்கள் .
ஆனால் நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோமா ?
என்ன status இல இருந்தாலும் நாம் என்ன state இல
இருக்கிறோம் என்பது தானே முக்கியம் !
நாம் தான் பிறந்ததில் இருந்து இருப்பது ஒரே
நிலை தானே ! மேலும் மேலும்
வேண்டும் என்பது தானே நமது நிலை
"இன்னும் கொஞ்சம்" இன்னும் கொஞ்சம் என்பதுதானே நமது இதயகீதம் ..
கிடைக்ககிடைக்க மேலும் ஒன்று தேவையாக
இருக்கிறதேத் தவிர கிடைத்ததினால் வரும்
சந்தோசம் நிலைப்பதில்லையே .
கிடைத்தவுடன் தான் தெரிகிறது நாம் அதை தேடவில்லை என்று.,
வேறு எதோ ஒன்று நமக்குத்தேவை எனப் புரிகிறது .
நமக்கு என்ன தேவை என்று நமக்கே புரியவில்லை !
அங்கும் இங்கும் அலைகிறோம் !
இது சந்தோஷத்தை தருமா ?
அது சந்தோஷத்தை தருமா ?
என TRIAL AND ERROR பார்ப்பதிலேயே
நம் காலம் கழிகிறது!
நமக்கு தக்கவழி காட்டும் சற்குருவும்
சட்டென்று வாய்ப்பதில்லை.
குருவோ தக்க மாணக்கனுக்காக
காத்திருக்கிறார் ! நமக்கோ இன்னும்
குருவின் அவசியம் தெரியவில்லை .
குருவின் அவசியம் புரிந்தவர்க்கே நல்லகுரு வாய்ப்பார்.
குருவை ஈர்க்க நம்மை நாம் அறியவேண்டும் ."அந்தநிலை"அடையவேண்டும் .
அந்தக்கரணங்கள் பிடிபடவேண்டும் .
வாழ்க்கை என்பது அந்தக்கரணத்தின்
அங்கத்தில் ஒன்றான " நான் " என்னும்
அங்கத்தில் கட்டுப்பாட்டில் இல்லாமல் ,
மனம் என்ற அடஙகாப்பிடாரியின்
வசப்பட்டு ஒரு கனவு நிலையிலேயே
பகல் கனவு காண்பதிலேயே கழிகிறது
ஜாக்ரதம் என்னும் நிலை
"நானும்" ,மனமும் சேர்ந்த நிலை
ஆனால் அதில் "நானை" மனம்
ஆக்கிரமித்துக்கொண்டு
ஜாக்ரத்தில் சற்று விழிப்பு நிலையில்
நம்மை இருக்கவிடாமல் பகல் கனவு
காணவைக்கிறது !
இந்த state இல் நாம் இருப்பதால் ,
மனம் போகும் பாதையே அங்கும் இங்கும் போய்
மேன் மேலும் கர்ம பதிவையும்
சமஸ்காரத்தைப் பெற்று அந்த
சக்கரத்தில் இருந்து விடுபடாமல்
அதிலேயே சுழன்று வருகிறோம் !
நமது வாழ்வு நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை
இதில் வலிமையாக அதன் வழியில்
செலுத்தும் ஆற்றல் கொண்ட கர்ம வினை பதிவுகளையும் ,
சமஸ்கார தூண்டுதல்களையும் கொண்ட
மனதின் ,வலிமையில் இருந்து மீள ,அதை கட்டுப்படுத்த
நமக்கு கிடைத்துள்ள ஒரு வலிமையான
கருவிதான் நமது மூச்சு !
வாழ்கை என்றுமே விழிப்புடன் இருக்கவேண்டிய
போர்க்களம் தான் ! விழிப்புடன் இல்லையெனில்
நாம் விரும்பும் வெற்றி நமக்கு கிடைக்காது !
அதற்க்கு அந்தப்போருக்கு என்றும்
நாம் தயாராக இருக்கவேண்டும் !
இதைக்காட்டத்தானே நாம் வணங்கும்
இறைவனின் வடிவங்கள் எல்லாம்
ஆயுதம் தாங்கி தயார் நிலையில்
இருக்கின்றன .
நாமும் விழிப்புநிலையில் எப்போதும் இருக்கவேண்டும்
அதுவே இறைநிலை ,
இறையின் வடிவங்கள் என்பவை விழிப்புணர்வின் உதாரணங்கள் .
வாழ்க்கையில் விழிப்புணர்வுடன் ,
பிரச்சனைகளை எதிர்கொள்ள
தயாராக இருப்பதை வலியுறுத்தும் வடிவங்கள் தானே அவைகள்.
சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் !
எனநமக்கு நம்பிக்கைத் தரத்தானே தெய்வ வடிவங்கள் !
ஒவ்வரு ஆயுதமும்
ஆழ்ந்த ஒரு உண்மையை
அதுகுறித்து தீவிரமாக வேண்டுபவருக்கு
அந்த ஞானம் தேவைப்படும் போது தருகின்றன .
மூச்சும் நாம் செய்யும் செயல்களும்
நேரடியாக தொடர்புடையவை !
எப்போதாவது பிறர் பேசும் பேச்சை ஒட்டுக்கேட்க்க முனைதிருக்கிரீர்களா ?
அபபோது மூச்சை அடக்கிக் கொள்கிறோம் .
புலன் அதிக தீவிரமாக வேலைசெய்கிறது .
உலக்கையில் இடிக்கும் போது மூச்சின் லயமே பாட்டுடன்க் கூடிஒலிக்கிறது ..
பளுவைத்தூக்க மூச்சை தம் கட்டுகிறோம் .
சந்தோஷமாக இருக்கும் போது மூச்சின் லயம் தனிதான்
பயம் வந்தால் மூச்சின் லயம் தனி !
செய்யும் ஒவ்வரு காரியத்திலும்
மூச்சின் போக்கு வரத்து விகிதம்தானே
மாறுகிறது !
நிதானமாக மூச்சு உள்ளே சென்று ,
நிதானமாக வெளியே வந்தால்
மனதில் தோன்றும் எண்ணங்களின்
எண்ணிக்கையும்தானே குறைகிறது !
எண்ணிக்கை குறைவான எண்ணங்கள்
வலிமை கொண்ட எண்ணங்கள்உருவாக்குகிறது .
அவைகள் கடந்த காலத்தையும் ,
வரும்காலத்தையும் தெளிவாக
உணரும் ஆற்றல் கொண்டவைகள்.
படிப்படியாக எண்ணங்கள் இல்லாத
ஒரு நிலையை அடையும் போது நாம்
அதை தியான நிலை என்கிறோம்
அதுவே துரியம் என்னும் ஒரு STATE
அது இதுவரை நாம் உணராத ஒரு
உன்னத நிலை !
அந்த நிலையில் தான் மனம் மசிகிறது
எண்ணங்கள் இருப்பதில்லை ,
ஆனால்அப்போது "நான்" மட்டும் இருக்கிறது !
*இந்த உன்னத நிலை வாய்க்கும் *போது*
*பிரபஞ்சத்தில்* *உள்ள COSMIC கதிர்கள்*
*நம் உடம்பில் பாயத்தொடங்கும்* !
இந்த நிலை அடிக்கடி வாய்க்கும்
போது நமது வாழ்கையின் போக்கும்
மாறத்தொடங்கும் !
நமக்கும் பிரபஞ்ச சக்திக்கும்
தொடர்ந்த ஒரு தொடர்பு ஏற்ப்படும் !
நாமும் பிரபஞ்சமும் ஒன்றாக இணைவோம் !
பின் என்ன வானமும் நம் வயப்படும் !
இன்னும் கொஞ்சம் மூச்சிப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.🙏
Comments
Post a Comment