*எனக்கு புரிந்தது இதுவே ! (33)*
உலகமே உங்களுக்குச் சொந்தமாக வேண்டுமானாலும் அது கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின் என்கிறார் வள்ளுவர். இந்தக் காலம் இடம் பற்றி முன்பே இரண்டுமுறை இத்தொடரில் பேசப்பட்டுள்ளது .
இதுவே கதை அல்லது நாவல் என்றால் சம்பவங்களின் தொடர்பு வைத்து ஒரு நேர் கோட்டில் கொண்டு செல்லலாம் .
ஆனால் இதுவோ மனிதனின் மனதைப் பற்றிய தொடர் எனவே எண்ணத்தின்
ஓட்டம் போல் சற்று மாறி மாறி முன் பின் போகவேண்டிஇருக்கிறது, .பொறுத்தருள்க ..
எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் காலமும் ,இடமும்
இயைந்து இணைந்து வரவேண்டி இருக்கிறது.அப்போதுதான் அந்தக்காரியம் நடைபெறும் . .
அவை இரண்டும் சற்று ஒருமைபடாமல் ,சிறிய வேறுபாடு இருந்தாலும் நூலிழையில்
எண்ணும் காரியம் நழுவிப்போகிறது .
சென்னை செல்ல ரயில் பிடிக்கவேண்டும் என்றால் ,
ரயில் வரும் ரயில்வே நிலையத்திற்கு முதலில் போகவேண்டி இருக்கிறது .
போவது மட்டுமல்ல ரயில் வரும் சரியான நேரத்தில் இருக்கவேண்டி இருக்கிறது .
அப்போதுதான் நாம் எண்ணியபடி நாம் போகவேண்டிய ரயிலை பிடிக்கமுடிகிறது .
போவது அவசியமா ? போவதினால் பலன் விளையுமா ? என்பதெல்லாம் ஒரு தனி பிரிவு ,
தனிஆய்வு .
எண்ணியதை செய்ய இடமும் காலமும் ஒத்து இருக்கவேண்டி இருக்கிறது .
இது நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் போருந்திவரவேண்டி இருக்கிறது ..
ஆனால்இந்த அண்டத்தில் எத்தனையோ காரியங்கள் ஒவ்வொரு கணமும தொடர்ந்து நடைபெற்று வருகிறது
.
ஒவ்வொன்றும் நெறி முறை தவறாமல் நடந்து வருகிறது .
அண்டத்தில் நடப்பதுவே பிண்டத்திலும்ஒவ்வொன்றும் இருக்கிறது ,அவ்வாறேஎல்லாம் நடைபெறுகிறது .
நம் உடம்பில் நடைபெறும் காரியங்கள் பல ஆயிரம் இருக்கும் ,அல்லது ஒரு தினத்தில்
பல லட்சங்கள் இருக்குமா ?
அத்துணை காரியங்களும் ஒரு முறை கூட பிசகுவது இல்லை ..
*எண்ணிப்பாருங்கள் மூச்சு விடுதல் ,உணவு ஜீரணித்தல் இப்படி எத்தனையோ ! .*
*மேலும் உள்ளத்தில்* *நடைபெறும் காரியங்களைப்பார்த்தால்* *சொல்லிவைத்தது போல்*
*உடனுக்குடன் நடக்கிறது .*
நம்பவே கூட முடிவதில்லை .
பார்த்தல்
சிந்தித்தல்
அடையாளம் கண்டு இனம் பிரித்தல்
நினைவில்வைத்தல்
மறுத்தல்
யோசித்தல்
எலாமே அதிசயம் தான் . ! தானே நடக்கும் அற்புதங்கள் !
உடலில் நடை பெறும் காரியம் மனதில் நடைபெறும் காரியம் மனதில் நடைபெறும் காரியம்
இவைகளுக்கு நாம் அதிகாரி இல்லை .
காலம் இடம் இவைகளை சேர்ப்பிக்க நாம் முயல்வதுமில்லை !
உண்மையில் காலம் என்பதுதான் என்ன ?
யாராவது இறந்துவிட்டால் காலமாயிட்டார் என்கிறோம் !
என்ன நினைத்து அப்படிக் கூறுகிறோம் ? அப்போ நமக்கு முன்பே காலம் என்றால் என்ன
என்று தெரியுமா ?
மனம் எப்போதும் இறந்த காலம் ,வரும் காலம் இவற்றில்
சஞ்சரிக்கிறது என்று பார்த்தோம் .
இந்த இறந்த காலம் , நிகழ்காலம் வரும்காலம்இவைத் தான் காலமா ?
இந்த முன்று காலத்தையும் பிரிக்கும் கோடு யார் போட்டது ?
இந்த நொடி ,நிமிஷம் மணி பகல் இரவு நாள் வாரம் மாதம்
பருவம் வருடம் எல்லாம் உண்மையில் இருக்கிறதா ?
யார் இதை பிரித்து எல்லை வகுத்தது ?
கொஞ்ச நாள் முன் நாழிகைஎன்றோம் ,
இப்போது மணி என்கிறோம் !.
இந்தியாவில் ஒரு மணி
அதுவே ஒவ்வொரு நாட்டிலும் வேறு மணி !
ஒரு இடத்தில் உறக்கம் விழிக்கிறான் ,
வேறு ஒரு இடத்தில் உறங்க செல்கிறார்கள் !
ஊருக்கு போக மனைவி மக்களை காண ஆவலுடன்
ரயிலுக்கு காத்திருக்கிறோம் , அரை மணி தாமதம் என்கிறார்கள்
அரை மணி போவது அரைநாள் போவதுபோல் இருக்கிறது !
ஒவ்வரு நிமிஷமும் ஒரு மணி போல் தெரிகிறது !
கை கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்க்கிறோம் .
அதுவே ஊருக்குபோய இரண்டு நாட்கள் உறவுடன் ஆனந்தமாக
கழியும் போது நேரம் போனதே தெரியவில்லை !
இரண்டு நாள் எப்படி போனது என்று தெரியவில்லை !
காலத்தின் அளவுதான் என்ன ?
காலத்தைப் பற்றிய நினைவு வந்து விட்டால் துன்பமாக இருக்கிறது
அதுவே காலத்தை பற்றிய நினைவு இல்லை எனில் ஆனந்தமாக இருக்கிறது !
மனிதன் தோன்றி இயற்கையின் கருணையில் வாழத்தொடங்கி
ஆரம்ப கால பயங்கள் சற்று குறைந்த போது தான் அடைந்த அனுபவங்களை தொகுக்க ஆரமித்தான் .
*பயம் தான் மனிதனின் அடிப்படை உணர்வு .*
பரிணாம வளர்ச்சியில் ஐந்துஅறிவு ஜந்துவிடம்
இருந்து அவன் அடைத்த சீதனம் பயம் தான் !
பயத்தைப் போக்க அவன் கண்ட வழியே சமூகம் !
மனிதனின் பயத்தை நம்பியே அரசுகள் இயங்குகின்றன !
மதங்களும் பயத்தை வளர்த்தே வாழ்கின்றன !
சுழன்ற வண்ணம் சூரியனை சுற்றிவரும் பூமியில்
படும் வெளிச்சத்தினால் ஆகும் பகல் இரவை அனுபவித்து
ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் எனக்க கொண்டான் !
உருவாகும் பருவ வேறுபாடுகளை பருவங்கள் ஆறு என
அனுபவத்தால் கொண்டான் ! முழுநிலவு மீண்டும் மறுமுறை வருவதை
மாதம் என கொண்டான் !ஆறு பருவமும் தவறாமல் வருவதை அறிந்து
ஒரு சுற்று ஒரு வருடம் எனக் கொண்டான் !
நாள் மாதம் பருவம் வருடம் எல்லாம்
அனுபவத்தில் கணக்கில் கொண்டதுதான் !
உண்மையில்அவை இல்லை
அனுபத்து அறிந்ததை
உணர்வில் உணர்ந்ததை பொருள்களின்
இயக்கத்தினாலும் உணர்ச்சியாலும்
வருஷம் மாதம் ,நாள் மணி என்று வெளிப்படுகிறது .
இயக்கத்திற்கு அதில் பெறும் அனுபவத்திற்கு
காலம் என பெர்யர் சூட்டுக்றோம் !
இதில் நல்லகாலம் கெட்டகாலம் என்று வேறு
ஒவ்வருவருக்கும் பிரிக்கிறோம் ! அவன் நல்ல நேரம்
எல்லாம் நல்லா நடக்குது என்கிறோம் !
மனிதன்தான் காலத்தை உருவாகுகிறான் !பின் அதைப பிடித்துக்கொண்டு
வாழ்வை கழிக்கிறான் .
கடவுளைமட்டுமே காலம் கடந்தவர் என்கிறான் !
மனிதர்கள் காலத்திற்கு கட்டுப்பவர்கள் என்றோன் !
இப்படியேதான் இடத்திற்கு கட்டுப்படுத்தும் நமது மாயையும் !
நாம் எப்போதும் நமது அறிவு காலம் காலமாகக் குறித்து வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ,சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள்
விதிமுறைகள் ஆகியவைக்கு உட்ப்பட்டு நடக்க
அநாதி காலமாக பழகயுள்ளோம் !
மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர் வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள்
இவர்கள்அடங்கியதுதான் இடம் ! இவர்களை அனுசரித்துத்தான் வாழவேண்டி உள்ளது !
இவர்களால் ஆனதே இடம் ! அதற்க்கு
என்னபெயர் வேண்டுமானாலும் இருக்கலாம் !
மற்றபடி வடக்கு தெற்கு கிழ் மேல் வட்டம் சதுரம் சிதம்பரம் .சென்னை மும்பை
அமெரிக்க கொரியா எல்லாம் நாம் வைத்த பெயர் தான் ..
வரும் ஆண்டுகளில் வேறு பெயர் வைக்கப் படலாம் ! முன்னர்அந்த இடத்திற்கு இதே பெயர் இருந்ததா ?
தெரியாது !எவ்வளவு நாளைக்கு இதே பெயர் இருக்கும் , தெரியாது !
பின் ஏன் அந்த இடம் எதோ ஒன்று என் மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர்
வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள் ஆகியோர்
உள்ளனர் ! எனவேஅந்த இடம் !
சுருக்கமாக
இரண்டு ஸெயல்கலூகு இடைப்பட்டதேக் காலம் .
இரண்டு பொருள்கள் , நபர்களுக்கு இடையில் உள்ளதே இடம் .
என்ன சற்று குழப்புகிறேனா ?
சற்று பொறுங்கள் இன்னமும் விளக்கம் தர பெரியோர் சொல் வரப்போகிறது
தகுந்த விளக்கம்அவைத்தரும்
*உணர்ச்சிக்கும் அறிவுக்கும் கட்டுப்பட்டு நடப்பதையே*
*காலத்திற்கும் இடத்திற்கும்* *கட்டுப்பட்டு நடப்பதாக கூறுகிறோம் !*
கடவுள்போட்ட வேஷம் காலம் !
காலம் போட்ட வேஷம் இடம் !
அகளமாய் யாரும் அறிவரித்து அப்பொருள்
சகளமாய் வந்ததென்று
உந்தீ பற :
தானாக வந்ததென உந்தீ பற
--திருஉந்தியார்
அகளமாய் -- நீள அகலம் என்றோ உயரம் ஆழம் என்றோ
நேற்று இன்று என்றோ
அறிவு ,அரிது காலம் இடம் இல்லாத
பரம்பொருள் --
சகளமாய் -- அப பரம்பொருள் சகலதத்துவனகளாகவும்
காலத்தோடும் இடத்தோடும் தோற்றம்
எடுத்தது..
இதையே மாணிக்கவாசகர் தெளிவாக
மேலை வானவரும் அறியாததோர் கோலமே !
எனை ஆட்க்கொண்ட கூத்தனே !
ஞாலமே ! விசும்பே ! இவை
வந்து போம் காலமே உன்னை
என்று கொள் காண்பதே ! -------என்கிறார்
எனவே காலம் இடம் என்பவை மனிதனின் மாயா தன்மை எனலாம்
உணர்ச்சியும் அறிவும் காலத்தையும் இடத்தையும் உருவாக்குகிறது !
கடவுள் காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்படாதவர் !
நாம் காலத்திற்கும் ,இடத்திற்கும் கட்டுப்படாமல்
இருக்கமுடியுமா ?
முடியும் என்றுதான் நமக்கு தியானம் எனும் சாதனத்தை
கட்டிகொடுத்துள்ளார்கள் !
உண்மையான தியானம் காலங் கடக்கும் !
உண்மையான தியானம் இடம் இல்லாதது ! உண்மையானத் தியானம் எங்கும் நிறைந்ததுபோருளைப்பற்றியது .
உண்மையான தியானம் வேண்டுபவை
எல்லாம் தரும் வல்லமைக் கொண்டது , அது கடவுளைப்போன்றது .
இனி உண்மையான தியானம் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம் .......🙏
ஓலைச்சுவடி சித்தர்
Comments
Post a Comment