*எனக்கு புரிந்தது இதுவே ! (36)*
*பொதுவாக ஆன்மீக பாதையில் பலரிடத்தும் ஒரு பெரிய மூட நம்பிக்கை உண்டு*
ஒரு குறிப்பிட்ட நபர் ஆன்மீக பாதையில் போகிறார் என்றதும்
மற்றவர் அந்தசாதகரைப் பற்றி என்ன புரிந்து கொள்கிறார்கள் ,
என்ன அவரிடம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால் ,
அந்த ஆன்மீக பாதையில் செல்ல முயலும் சாதகர் மற்றவர் போல்
இருக்கமாட்டார் , எப்போதம் வித்தியாசமாகவே இருப்பார் ,
சாதரணமாக அனைவரைப் போலவும் சாப்பிடமாட்டார் ,
ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பார்
அவர் எப்போதும் மிகவும் கடு கடுப்பாகவே இருப்பார் ,
அவரிடம் நகைச்சுவை உணர்வு இராது ,
அன்பு என்பது இல்லாது வறட்டு ஆசாமியாக இருப்பார்
முக்கியமாக ஏதாவது குடிசையில் மிக ஏழ்மையாக
தரித்திர நிலையில் வசிப்பார் ,
மேலும் அவர் நாகரீகமாக இருக்கக்கூடாது
தாடி மீசையுடன் தான் இருக்கவேண்டும் .சாதரண மனிதர் போல் இருப்பது
ஆன்மீக பாதையில் செல்வதற்கு தகுதியில்லை என்பது தான் பெரும்பாலோரது .முடிவு ..
மேலும் தனது உடமைகளை பிறருக்கு தானம் செய்து விட்டு
தனக்கு என்று ஒன்றும் இல்லாமல் இருப்பார்
இதுவே ஆன்மீக வாதி என்றதும் அநேகருக்கு வரும் கற்ப்பனை சித்திரம் .
அவரிடம் பிறருக்கு உதவி செய்யவோ அல்லது தனது ஆன்மீக சாதனைகளைத்தொடர
தேவையான பொருள் வைப்போ இருத்தல் ஆகாது என்று எண்ணுகிறார்கள் .
ஆனால் அத்தகைய ஜீவன்முக்தர்கள் பொருள் இருப்பினும் அதன்மேல் பற்றற்ற ,
துறவு நிலையிலேயே எப்போதும் இருப்பதும் ,பொருள் இருப்பினும் ,இல்லாதுதிருப்பினும்
அவர்களது சமநிலை மாறுவதில்லை என்பது மற்றவர்களுக்குப் புரிவதில்லை .
அனேக திருத்தலங்களுக்கு தேரும்,திருப்பணிகளும் செய்துகொண்டு சாக்குக் கட்டிக்கொண்டு வாழ்ந்த சித்தரும் உண்டு ,பட்டுத்துணி உடுத்தி ராஜரிஷிபோல் வாழும் ஞானிகளும் உண்டு
அவர்களின் நிலையைப்பற்றி விமரிசிக்க,நாமும் அவர்தம் நிலை அறிந்திருக்கவேண்டும் .ஆயினும்
நமக்கு அவர்களின் உபதேசங்களும் ,வாழிகாட்டளுமேத் தேவை .
அவரவர் கருமப்படி ஞானியர்தம் வாழும் வழி அமைகிறது .
உண்மையில் கடும் நோன்பு ,ஆன்மீக வாழ்வு இவைகளுக்கு இடையில் இருக்கும்
வித்தியாசத்தை புரிந்து கொள்ளாததால் இத்தகைய விமரிசனங்கள் வருகின்றன
சில நிலைகளை அடைவதற்கு இத்தகைய நோன்புகள் அவசியம் தான் ,
ஆனால் வாழ்வு எப்போதும் நோன்பு மயமாகவே இருப்பதில்லை ,
வாழ்க்கை என்பது நோன்பால் மட்டும் ஆனதில்லை
எளிய வாழ்க்கை என்பது வேறு , வறுமையில் வாடுவது என்பது வேறு !
வீட்டில் உணவு இருந்தும் உண்ணாமல் இருப்பதுதான் உண்ணாவிரதம் !
வீட்டில் ஒன்றும் இல்லாத போது உண்ணாமல் இருப்பது பட்டினி எனப்படும் .
அது போல் ஆன்மீக வாதி அவ்வப்போது நோன்புஎனும் விரதம் இருக்கலாம் ,
ஆனால் வறுமையில் தன்னை வருத்திகொள்வது ஆன்மீக வழி இல்லை .
உண்மையான ஆன்மீக வாதிக்கு தான் விரும்பும் வாழ்வை
அமைத்துக்கொள்ள மற்றஅனைவரை விட நன்றாகத் தெரியும் .
விதிஎன்னும் வினையை எப்படி தன வழி கொண்டுவருவது
என்பதுஅத்தகைய ஞானிகளுக்குப் புரியும் .
ஆன்மிகம் என்பது ஒரு மதிக்கத்தக்க நிலைஅது அனைத்தையும் புரிதல்எனும் அரிய ஒரு நிலை ..
பரிணாமத்தில் அடுத்த நிலைக்கு போகும் முயற்சி !
ஆனால் மனிதன் மட்டும் தன முயற்ச்சியால்தான் பரிணாமத்தின்
அடுத்த படிக்கு போகமுடியும் . .
மனித ஜன்மத்தின் வாழ்க்கையின் அர்த்தமே அது தான் !
அதில் முதல் படி தன்னை அறிதல் !
அதாவது தன்னிடன் இருப்பதை stock எடுத்தல் ,
என்னென்ன தேவை என அறிதல் ,
என்ன என்ன தள்ளவேண்டியது என்பதை புரிதல் ,
DO"S AND DONT தெரிந்து கொள்ளுவது .!
பெற வேண்டியவைகளை பெற வேண்டுமானால் ,
தள்ளவேண்டியத்தை தள்ளவேண்டும் .தேவையற்றதை செதுக்கி அகற்றினால்தான் பாறை சிலையாகிறது .
பிறகு என்ன செய்யவேண்டும் என தெரிந்து கொள்ளவேண்டும் !
அதில் பயிற்ச்சி பெறவேண்டும்.
அதில் தேர்ந்த பின் அதை தொடர்ந்து சாதகம் செய்யவேண்டும்
அதுவே வாழ்வாகஆகவேண்டும்
தான்வேறு வாழும் நிலைவேறு இல்லை எனும் மனநிலை தன்னுள்
உருவாகவேண்டும் .பின் தான் என்பது அதுவே ஆகவேண்டும் !
அத்வைதம் மலரவேண்டும் .
ஒருமைப்பாடு புலப்படவேண்டும் .
இதையே அஷ்டாக யோகம் என யோகத்தின் படிகளாக
நமக்கு உரைத்துச் சென்றனர் பதஞ்சலி போன்ற சித்தர் பெருமக்கள் ..
சாதாரண வாழ்க்கை வெவேறு ஆசைகளும் பேராசைகளும் திரும்பதிரும்ப
வந்துவட்டமடிக்கும் ஒரு நிலையாகும் .
இதில் படிபடியாக வட்டத்தில் இருந்து வெளிவரும் மார்கத்தை
குருவருளாலும் , சிறிது புருஷர்த்ததாலும் ,பெரும் பகுதி அவனருளாலும்
பெறவேண்டும் .அவனருள் பெற அவனருள் வேண்டி ஜன்மம் தோறும்
ஏங்கவேண்டும் .அத்தகைய விழிப்புணர்வு சிறிது சிறிதாக
ஓங்கும் போது அவனருள் வந்து அவனை உய்விக்க வாய்க்கும் .!
அப்படி இருக்கும் போது நாம் வாழும் தற்சமய வாழ்க்கை மிகவும் பொருள்
படைத்ததாகிறது ! இதை எப்படி எப்படியோ தாறுமாறாக வாழ்ந்தால்
.எப்படி நிகழ்காலம் வருங்காலத்தை இந்த வாழ்வில் நிர்ணயிக்கிரததோ,
அவ்வாறே நாம் வாழும் தற்கால வாழ்க்கை முழுவதும் ,நமது அடுத்தபிறவியின் வாழ்வை நிர்ணயிக்கிறது அது பாதிக்கிறது .
இந்த வாழ்வின் தொடர்ச்சியாகவே அடுத்த ஜன்ம வாழ்வு தொடர்கிறது .
ஆயினும் அதை உணரவோட்டமல் நாம் பூசிக்கொள்ளும்
இப்போது வாழும் வாழ்க்கையின் அனுபவங்களும் ,உறவுகளும்
நம்மை புதிய புதிய பொறுப்புகளிலே அதிக கவனம் செலுத்தி
நமது நீண்ட பயணத்தின் நீட்ச்சியை மறக்க செய்து விடுகிறது .
இவ்வாறு இல்லாமல் நாம் ஆற்றவேண்டிய சொந்த கடமைகளில்
கவனம் செலுத்த நாம் என்றும் நிலை குலையாத
சம நிலையில் இருத்தல் வேண்டும் .! தெளிந்த மனம் இருக்கும் போது தான்
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சரியான வழி புலப்படும் .
உதாரணமாக சொன்னால் நாம் பெரும் பாலும்
ஈடுபடும் ஒரு விஷயத்தை பார்ப்போம் !மனிதன் செய்யும் யோசனைகளில் பெரும்
பங்குவகிப்பது உணவைப்பற்றி தான் இருக்கும் ! என்ன சாப்பிடுவது ?
எப்போது சாப்பிடுவது ? போதிய அளவு சாப்பிடுவோமா ?
என பெரும்பாலும் யோசனை அமைகிறது .
உணவைப்பற்றிய பேராசையை வெல்லவேண்டுமானால் ,
உணவில் அக்கறை இல்லாத ஒரு சம நிலை வளர்க்கவேண்டும் .
உணவை வெறுப்பதோ ,ஒதுக்குவதோ அதை வெல்லும் வழி இல்லை !
உணவு கிடைத்தால் அதை நன்கு சாப்பிடு இல்லையென்றாலும் அதைப்பற்றிய கவலை
இல்லாமல் அது குறித்து அதிகம் வாடாமல் இருக்கவேண்டும் .
உணவு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கும் போது கவலை ஏன் ?
நாம் என்னமோ உணவை நாம் தான் ஈட்டுவது போல் கவலை படுகிறோம் .நான்
எனும் தனமாத்திரை அந்தக்கரணம் வரும் போதுதான் கவலை எனும் தீய உணர்வு வந்து
நமது சம நிலையை குலைக்கிறது .
ஒரு துறவி நோன்பை பற்றியும் அதில் உணவை எப்படி ஒதுக்குவது என்று
எப்போதும் யோசித்து வந்தால் அதுவும் தவறே ! எப்படி உணவு வேண்டும் என்று
அதைப்பற்றியே சிந்திப்பது தவறோ அவ்வாறே அதை ஒதுக்கவேண்டும் என்று அதைப்பற்றியே
சிந்தித்து இருப்பதும் தவறுதான் .!
உள்ளத்தின் உள்ளே இருக்கும் ஆன்மாவுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
அப்போது இவைஎல்லாம் கோஷமும் முக்கியம் இல்லை
முக்கியமானதுதம்முள் இருக்கும் இறை நிலை ஒன்றைப் புரிதலே
என்பது தெரிந்து விடும் .
அப்படி வாழும் போது எல்லா பேராசைகளும் நம்முள் நிலைபெறாது
அத்தகைய புரிதலே நம்மை
உயர்த்திவிடும் ! எதற்கும் ஏங்க வைக்காது ,
கவலைபடவைக்காது ,ஆசைப்பட்டு துடிக்கவைக்காது ,
நடப்பது எல்லாம் நல்லதிற்கே என்பது புரியும் .
அப்போது நமக்கு எது நடந்தாலும் அது நல்லதா ?அவாறு எடுத்துக்கொண்டு
சும்மா இருக்கவேண்டுமா என்றால் முழுவதும் அப்படி இல்லை
சாதரண உணர்வில் இருக்கும் போது இது
சரியில்லை . இந்தநிலை ஆன்மாவை உணர்ந்தால் தான் !
இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து
பூரண சரணாகதி அடைத்தால்தான் வாய்க்கும்
சரணாகதி அடைதல் என்பதில் நேர்மை இருக்கவேண்டும்
அதில் எந்த பொய் இருந்தாலும்
நிச்சயம் அப்போது எது நடந்தாலும் நல்லதுஎன்பது இல்லை
நேர்மையான சுய அர்ப்பணம் செய்யும் போது கிடைக்கும்
வெகுமதி நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நிலை ,
எங்கும் பெறமுடியாத நிம்மதி , மக்ழ்சி பாதுகாப்பு !
ஆனால் நம்மில் நேர்மை அவசியம் !
எனவே சமநிலை என்பது நமது வாழ்வில் ஒரு அம்சமாக பழகவேண்டும் .
புறத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் நமது அக உணர்வை பாதிக்காத அளவு
பார்த்துக்கொள்ளவேண்டும் !
மற்றவர்களால்அவர்களது விருப்பு வெறுப்பால் நாம் அசைக்கப்பட முடியாதவர்களாக
இருப்பது நமக்கு பெருமைதானே !
நடக்கும் ந்கழ்சிகளும் உள்ளது உள்ளபடியே ,
அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் வர வேண்டும் !
இதில் ஒரு உண்மை என்னவென்றால் நாம் பெரும் பாலும் அப்படிதான் இருக்கிறோம்
!அப்படியே தான் எதையும் ஏற்றுக்கொள்கிறோம் .
ஆனால் அதில் சம நிலை மட்டும் நம்மிடம் கிடையாது .!
ராக் துவேஷ் எனும் இருவேறு நிலை எப்போதும் நம்மில் உண்டு .
.ஒன்று வெறுப்போம் ! இல்லை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம் !
பாருங்கள் ! இந்தியாவில் பிறந்ததால் இந்தியன் என பெருமை பேசுகிறோம்
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
இந்துவாக பிறந்ததால் இந்து மதத்தைப்பற்றி ,அதன் சித்தாந்தம்
வேதாந்தம் பற்றி பேசுகிறோம் !
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழ் பற்றி
பெருமை பேசிகொள்கிறோம் !
இதில் நமது தேர்வு ஏதாவது உண்டா ?
இதில் எதுவும் நாம் தேர்வு செய்ய வில்லை !
நமதிச்சையால் வந்தோமில்லை
முதல் இறுதி நம் வசம் இல்லை !
ஆனால் இதில் உயர்வு வெறுப்பு மட்டும் நம்மிடம் உண்டு !
பொதுவாகவே நாம் நமது வாழ்வில் எதையும் தேர்வு செய்வதில்லை !
வருவதை அப்படியேஏற்றுக்கொள்கிறோம் .ஆனால் நமது சுமையான மனம் ஒவ்வொரு
நிகழ்ச்சியையும் ,தன்னிடம் உள்ள முந்தய அனுபவங்களுடன் ஒப்புநோக்கி ,அதற்க்கு
ஒரு சாயம் பூசி , அந்த நிகழ்ச்சியை
ஒரு சமநிலையில் பார்க்க விடாமல் அதன் மேல் ஒரு ராக துவேஷம்
உண்டாக்கிவிடுகிறது ! அப்போதுதானே நாம் அந்த வட்டத்திலேயே இருப்போம் .!
வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் முதலில் நமக்கு புற நிகழ்ச்சியால்
அக உணர்வு
பாதிக்காத நிலை வர பயிலவேண்டும் .
அது சொல்லுவது போல் அத்தனை சுலபமல்லை .
அதற்க்கு பல நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் .
அதற்குதான் தியானம் மிக அவசியம் ,
தியானம் கை கூட பிராண யாமம் கை கூடவேண்டும் .
இவை கை கூட வாழும் வாழ்க்கை
இரை மட்டும் தேடுவதாக இருக்கக்கூடாது .
தியானம் என்பது பலபூட்டுகளைத் திறக்கும் சாவியாக அமைகிறது .தியானத்தின் அவசியத்தை எடுத்தியம்பவே இத்தனையும் விவாதிக்கவேண்டி இருக்கிறது .
எதையும் அதன் அவசியத்தை உணர்ந்தால் தான் அதைப்பெறவேண்டும் எனும் தீவிரம்
அமைகிறது ..தீவிரம் இல்லாமல் தீர்வு என்பது கிட்டாது .
அடுத்து சிலகருத்துக்களை அடுத்தப்பகுதியில் காண்போம் .💐
*அன்புடன் ஓலைச்சுவடி சித்தர்*
Comments
Post a Comment