*எனக்குப் புரிந்தது இதுவே ! (38)*

உணர்வுகள் என்பது ஆன்மாவின் ஒளி என்று பார்த்தோம் .
மனிதன் சத்துவம் ,ரஜஸ்,தமஸ்
என்னும் முன்று குணங்களின் வடிவானவன்

இதில் சத்துவம் என்பது ஞான சேர்க்கை , ரஜஸ்என்பது கர்மாவின் சேர்க்கை ,
தமஸ்என்பது மயக்கத்தில் ஆழ்த்தும் மாயை

இந்த முன்று குணங்களில்மனிதர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்த படி அப்போது இருக்கும் உணர்வு
நல்லதாகவோ தீயதாகவோ மாறுகிறது .
குணம் என்பது இருக்கும் தன்மை ,சுழ்நிலை ,உண்ணும் உணவு ,விரதம் முதலியவை பொருத்ததாகும்
ஆயினும் என்றும் சத்துவ நிலையில் இருப்பது ஆன்மீக வாழ்வின் அவசியத தேவை

நமது தனிப்பட்ட வாழ்வு ,பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும் .
நாம் வாழும் வாழ்வு அமைதியையும் பாதுகாப்பையும்
பெறவேண்டுமானால் நமது வாழ்வு நம்மை சுற்றி இருக்கும் உலக வாழ்வுடன் ,பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து இருக்கவேண்டும் .

தியானம் என்பது உணர்வை குவிப்பது, உடம்பினுள் உணர்வினை வளர்ப்பது அது மனதை சரிவர கையாளுவது .

ஆனால் தனிப்பட்ட வாழ்வு பிரபஞ்ச வாழ்வில் இருந்து வேறுபடுமானால் இது கடினம் ஆகிவிடும் .
மனதின் ஆற்றல் ,உடல் ஆரோகியம் இவை அனைத்திற்கும் தேவையான ஆற்றல் பிரபஞ்ச வாழ்விலும் பிரபஞ்ச மனத்திலும் அடங்கயுள்ளன .பிரபஞ்ச மனம் உலகின் மொத்த மனம் ஆகும் .
அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் ,அந்த எல்லையற்ற ஆற்றலுடன் இயந்து வாழத்தெரியவேண்டும்

சுலபமாக இதைச் சொன்னால் சுற்றி இருப்பவர்களுடன் இயந்து வாழத் தெரியவேண்டும் .
நம்மைப் பொறுத்தவரை நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் உலகம் .
சாதாரணமாக மனிதனின் மிகுதியான சக்தி பிறர் மேல் ஆதிக்கம் செலுத்துவதிலும் , பல பிற ஆற்றலுடன் போராடுவதிலும்தான் வீணாகிறது .
இந்தப்போராட்டங்கள் வீண் என நமக்கு சரித்திரம் தெரிவித்தாலும் ,நாம் போராடுவதில் இருந்து ஒய்வு பெறுவதில்லை .
உலகை சீர்திருத்துவது இதுவரை யாராலும் கைகூடவில்லையே !
அதைவிட நம்மை திருத்திக்கொள்வது ,சிறிது மாற்றிக்கொள்வது மிக சுலமம் என்பது புரிவதில்லை .!
ஓடும் நீரில் அதன் போக்கிலேயே மிதந்து செல்லும் சுகம் நமக்கு புரியவில்லை .!
அதனுடன் எதிர்த்து நீச்சல் அடித்து நமது சக்தியை வீணடித்தே வருகிறோம். அவ்வப்போது இயற்க்கை முணு முணுக்கும் , அறிவுச் செய்திகள் நம் செவியில் விழுவதில்லை .

நமது அந்தக்கரணம் ஆகிய மனம் ,சித்தி ,புத்தி அகங்காரம் நம்மை
இயந்து பிரபஞ்ச வாழ்வுடன் நடக்க விடுவதில்லை .
உலகை திருத்த முயலாமல் ,வாழ்க்கையின் புதிர்களுக்கு விடை காண முயல்வதும் ,அதன்
நியதிப்படி வாழ பழகுவதும் நமது ஆன்மீக வாழ்விற்கு துணை புரியும் .!

வீண் சண்டையிலேயே காலம் கழித்தால் ,நாம் சென்றடைய வேண்டிய இடத்தை எப்போது சென்றடைவது .


இப்போது நான் கூடஇந்த உலகை திருத்த இத்தொடரை எழுதவில்லை .எனது வாழ்வின் புதிர்களை விடுவிக்க சற்று உரக்க சிந்திக்கிறேன் . உங்களுடன் இணைந்து சிந்திக்கிறேன் .
அவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் .

எப்பவுமே நன்மை -தீமை ., இன்பம் -துன்பம் .ஒளி -இருள் போன்று இருமை நிறைந்ததுதான் வாழ்க்கை . !
இந்த இணைகளில் ஒன்றை விட்டு ஒன்றை மாத்திரம் பற்றி வாழ முயன்றால் பிரபஞ்ச வாழ்வுடன் இயந்து வாழ முடியாது .

இந்த பிரபஞ்சமும் சுருங்கி விரிகிறது .
நமது வாழ்விலும் ஏற்ற இறக்கம் உண்டு !
பள்ளம் இருப்பதால் தான் மேடு என்று ஒன்று இருக்கிறது
இருள் இல்லை என்றால் வெளிச்சம் நமக்குத் தெரியுமா

ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் எப்படி நாணயமாகும் .
ஒரேப்பக்கம் கொண்ட காகிதிதம் எங்காவது இருக்கிறதா
நமது வாழ்வில் இயல்பு வேண்டுமானால்
இந்த இருமையை ஏற்றுக்கொண்டுதான் ஆகா வேண்டும் .

வாழ்க்கையில் போராடுவது இல்லையென்றால்தான்
வீணாகும் சக்தி ஆன்மீக வாழ்வுக்கு பாயும் .

இதை ஒப்புக்கொள்வது சரணாகதி !
இது கோழத்தனம் அல்ல
இது பக்குவப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் .

பொங்கும் மனத்துடன் எதையும் சாதிக்கமுடியாது .
இயந்து வாழ்தலின் ரகசியம் நம்முள்தான் இருக்கிறது
அதை நாம் எங்கோ வெளியில் தேடி பொழுது போக்குகிறோம் !
நம்மைச் சுற்றிய புறலகம் தொடந்து மாறிக்கொண்டே இருக்கிறது .
அதை கட்டுப்படுத்த நம்மால் முடியாது .நம்மால் யாரையும் மாற்ற முடியாது .

அவரவர்க்கு அவரவர்
வினை வழி விதி தனியே உள்ளது .!
அக்கம் பக்கம் பாராமல் முதலில் நம்மை ,
நமது அக உலகை
மாற்றுவதுதான் ,நமது முதல் பணி.

எதிலும்யாருடனும் போட்டி தேவையில்லை !
வாழ்க்கைஎனும் விளையாட்டிற்கு ,உலகம் எனும் மைதானம் மிகப் பரந்தது,மிகப் பெரியது !
ஒருவரைப் போல் இன்னொருவரில்லை !
ஒவ்வருவரும் தனிப் பாதை வகுத்துகொள்ள முடியும் .

ஒரு பாதையில் எதிர் எதிரே இரண்டு நல்லவர்கள் வந்தால்
இரண்டு பாதை புதியதாக ஏற்ப்படும்

இருவருமே ஒதுங்கி புதியபாதை ஏற்ப்படுத்துவர் .அங்கேப் பாதையைப் பயன்படுத்தப் போட்டி இராது .இருவரும் தனித்தனிபுதியபபாதை ஏற்படுத்திக்கொள்வர்.

ஒரு நல்லவரும் ,ஒரு கெட்டவரும் எதிர் எதிரே வந்தால் ஒரே ஒரு புதிய பாதை ஏற்படும் !கெட்டவன் பழயபாதையில் செல்வான் .

நல்லவனோ ஒதிங்கிப் புதியபாதை ஏற்ப்படுத்திக் கொள்வான்


இரண்டு கெட்டவர்கள் எதிர் எதிரே வந்தால்
ஒருவருக்கும் பாதை இராது !

இருவரும் சண்டையிட்டு பாதிலேயே பயணத்தை விடுவார்கள் .

இருவருக்கும் பாதை இராது

*உண்மையில்* *நல்லவர்கள்* *என்றால்*
*நன்றாக* *வாழத்தெரிந்தவர்கள் என்பதே !*
*நாம் எதையும் யாருக்கும் ஆளுமை செலுத்தி*
*அறிவிக்கத்தேவை இல்லை !*
*உண்மையை சொல்லப்போனால் நாம் சொல்லப் போவது அனைத்தும் முன்பே அவர்களுக்கு ஓரளவு தெரிந்ததால் தான் அவர்கள்*
*அதை காதுகொடுத்துக்* *கேட்க்கிறார்கள் அல்லது படிக்கிறார்கள் !*

*தெரிந்தவர்க்கு மட்டுமே சுவாரசியம் வருகிறது .*

கம்ப ராமாயணம் படித்து ரசிக்கிறோம் .நண்பர்களிடம்
அதன் சிறப்பை சிலாகித்து மக்ழ்கிறோம் .
பிறகு சிறிது காலம் சென்று மீண்டும் கம்ப ராமாயணம்
படிக்கிறோம், புதியசுவை ,புதிய நயம் புலப்படுகிறது !
அனுபவித்து மகிழ்கிறோம் ! என்ன கம்ப ராமமாயனத்தில்
புதிய பாடலோ ,பக்கமொவா இம்முறை புதிதாகச் சேர்ந்தது .

முன்பு பல முறை படித்த அதே பழைய கந்தல் புத்தகம் தான்
நாம் மாற்றம் அடையும் போதுஅதே புத்தகம் நமக்கு புதிய சுவை
தோன்றச் செய்கிறது ..
மாற்றம் புத்தகத்தில் இல்லை .
நம்மில் தான் ஏற்படுகிறது

நாம் மாறியதால் தான் ,நமக்கு அதில் இருக்கும் விஷயங்கள் முன்பே தெரிந்ததால் தான் அந்தப் புத்தகத்தை
தேடி படிக்கமுடிகிறது ரசிக்க முடிகிறது .!
அப்படியே தான் நாம் கூறும் விஷயங்களை
முன்பே தெரிந்தவர்கள் தான் ,அந்த
சுவை அறிந்தவர்கள் தான் அதை படிக்கவே செய்கிறார்கள் .!
அவர்களுக்கும் நாம் கூறும் விஷயம்
முன்பே தெரிந்ததால் தான்
ரசிக்க்கவும்செய்கிறார்கள் ..முன்பே தேடுபவர்களைத்தான் ,அந்த பக்குவம் உள்ளவர்களைத்தான் எந்தச் செய்தியும் போய்சேருகிறது .

உண்மையில் வெளியில் இருந்து வருவது
போல் இருக்கும் எந்த அறிவும் , உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமேயாகும்.

உண்மையில் தேவைப்படும் எதுவும் வெளியில் இல்லை !
நாம் பிறரைப் பற்றி கூறும் குறைகள் கூட
உண்மையில் அந்தக் குறை நம்மிடம் இருப்பதால் தான் நமக்குத் தெரிகிறது.நம்மிடமே அந்தக்குறை இல்லாவிடில் அடுத்தவர் குறையும் நமக்கு அத்தனை எளிதில் புலப்படாது .


எனவே எதையும் வெளியில் தேடி அலையாமல்
நம்மிடம் புதைந்துள்ள அளவற்ற அருளாலளின்
கருணையான பரிபூரண ஞானத்தின் பெருமையை
உணர ,நம்மிடம் படிந்துள்ள மாசுகளை நீக்க
முயச்சித்தலே வாழ்வின் சிறந்த செயலாகும் .

சாதாரணக் கல்லும் ,நீக்கபடவேண்டியவைகளை செதுக்கி நீக்குவதாலேயே அழகிய சிலை ஆகிறது .

வாழ்தலில் உள்ள வேண்டாத குணங்களையும் ,பழக்க வழக்கத்தையும் நீகினாலேயே ,வாழ்க்கை சிறப்புடையதாக மாறும் .

இந்த வாழ்வும் இந்த குறிக்கோளை அடையும் பாதையும் சீராகவும் , இன்பமயமாகவும் இருக்கவேண்டும்.!
ஆனந்தமாக வாழ்வது நமது அடிப்படி உரிமை !

இந்த தொடரின் இடையே நான் இந்தத்தொடர் முடியும் போது ஆளுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் கிடைக்கும் எனக் கூறியிருந்தேன் .
உண்மையில் அதற்க்கு வேண்டிய வழியை நான்
பலமுறை இந்தத் தொடரில் கூறிவிட்டேன் .

ஆனால் தொடர்ந்து இந்தத் தொடரை இடைவெளி இல்லாது
எழுத இயலாதது என் தவறு தான்
.தயவு செய்து மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்துப் பாருங்கள் .

நாம் ஆனந்தமாக வாழப் படைக்கப்பட்டவர்கள் ,அதற்க்கு துணையான அத்தனை கருவிகளும் நம்முடனேயே படைக்கபட்டிருப்பதும் புரியும் .

உண்மையில் இந்தத் தொடரில் கூறப்பட்டது எல்லாம்
எனக்கு முற்றிலும் புரிந்தது இல்லை ! இவ்வளவு புரிந்தால்
நான் ஏன் இப்படி இருக்கிறேன் ,புரிதல் மட்டுல் போதாது ,அது உணர்வுடன் ஒன்றவேண்டும் .
ஆகவே ஆரம்பத்தில் சொன்னது போல்
நான் எழுதியது எல்லாம் முதலில் எனக்குத்தான் .
ஒரு மாணவனாகத்தான் சிந்தித்தேன் .

ஆளுக்கு ஒரு அஷய பாத்திரம் கிடைப்பதற்கு
வேண்டிய சில நடை முறை யுக்திகளை இன்னும் இரண்டு பகுதியாக எழுத எண்ணுகிறேன்
.

இதில் கடவுளைப் பற்றி தனியே எதுவும் கூறவில்லையே
என ஒரு எண்ணம் எழுகிறது .

நமது உடலைப்பற்றியும் ,உடம்பின் தத்துவங்களைப்பற்றியும் ,மனதைபற்றியும் விரிவாகப் பார்த்தோம் .இத்தனை உயர்வான ஒரு

படைப்பைப் படைத்தவர் உயரியவராகத்தானே இருக்கமுடியும்

படைப்பே படைத்தவனின் உயர்வை பறைசாற்றும் .
நம்மை அறிந்தால் ,இறைவனையும் அறிந்தவனாக ஆவோம் .

.நம் ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார் .
ஆனால் நாம் ஒவ்வருவரும் கடவுள் அல்ல
அவர்தான் ஞானமாகவும் ,ஆன்மாவாகவும்நம்முள் இருந்து நம்மை வழி நடத்துகிறார் .

நம்மை பரிணாமத்தின் அடுத்தபடிக்கு
தயார் செய்வதுதான் இந்த வாழ்க்கை .
மனிதனை தேவனாக்கும் முயற்சிதான் இந்த வாழ்க்கை பாதை .
ஆனால் அந்தப் பரிணாமம் தகுதி உடையவர்க்கு மட்டுமே
வாய்க்கும் என்பது மட்டும்நன்றாகப் புரிகிறது.

.இனி அடுத்ததில் சந்திப்போம்💐

*அன்புடன் ஓலைச்சுவடி சித்தர்*
*அண்ணாமலை சுகுமாரன் ஐயா அவர்கள் ✍️*

Comments

Popular posts from this blog

எனக்கு புரிந்தது இதுவே ! (19)-